இந்திய கால்நடை மருத்துவக் கழகத்தின், கால்நடை கல்விக்கான குறைந்தபட்ச தரம் 2016 (எம்.எஸ்.வி.இ.2016) வழிகாட்டுதலின்படி இளநிலை கால்நடைமருத்துவப் படிப்பிற்கு தேவையான அனைத்து ஆய்வு உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொடூரமான பெருந்தொற்றுக் காலத்திலும் மேற்கொண்டு பூர்த்தி செய்யப்பட்டன.
கல்லூரியின் முதல் விளையாட்டு விழா “ரேடியன்ஸ்” சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது.
தமிழ் இலக்கியத்தில் மாணவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும்,
ஊக்கப்படுத்தவும், ”தளிர் 2022” மாணவர் இதழ் வெளியிடப்பட்டது.
நாட்டின நாய் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில், மதுரையில் தேசிய அளவிலான ”நாட்டின நாய் வளர்ப்புக் கண்காட்சி” மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
75 – ஆம் ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின்
பகுதியாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியம், வினாடி – வினா, குறும்படங்கள் ஆகியன மாணவர்களுக்கு நடத்தி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.