திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகத் 09.10.2012 அன்று துவங்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள இராமையன் பட்டியில் சுமார் 139.21 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கல்லூரி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிள் உள்ள கறவைமாடு, ஆடு மற்றும் கோழிப் பண்ணைகள், பண்ணை யாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திருநெல்வேலி இராமையன் பட்டியில் இக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலின் (VCI) விதிமுறைகளின்படி, தேவையான மனிதவளம், இடம் மற்றும் உபகரணங்களுடன் பதினைந்து கல்வித்துறைகள், கால்நடை மருத்துவ வளாகம் மற்றும் கால்நடை பண்ணை வளாகம் நிறுவப்பட்டுள்ளன. இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பு தொடங்குவதற்கு ஏதுவாக 2011 - 2012 ஆம் ஆண்டு ஏழு துறைகளுடனும் 40 மாணவர்களுடனும் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய கால்நடை மருத்துவ கழக ஒப்புதலுடன் 2015-16 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை 60 ஆகவும், 2017-18 ல் 80 ஆகவும், 2021-22 முதல் 100 ஆகவும் உயர்த்தப்பட்டது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சியைத் தொடர்வதிலும், மேம்பட்ட கால்நடை மற்றும் கோழி உற்பத்திக்கான அறிவியல் அறிவு மற்றும் திறன்களைப் பரப்புவதிலும் தேசிய அளவில் சிறந்து விளங்கும் நிறுவனமாக இருக்க விரும்புகிறது.
டாக்டர். எம். செல்லப்பாண்டியன் முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358, தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: +91-462 -2336345; தொலைநகல்: +91-462-2336344 மின்னஞ்சல்: deanvcritni@tanuvas.org.in