cppm

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர்

தோற்றம்

கோழித் தொழில்நுட்பம் விவசாயத்துறையில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய முட்டை உற்பத்தியாளராகவும், பிராய்லர் கோழி உற்பத்தியில் நான்காவது பெரிய நாடாகவும் உள்ளது. 2016-17ஆம்ஆண்டில் 427.53 ஆயிரம் டன் கோழிஇறைச்சி உற்பத்தி செய்து தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. இது இந்திய நாட்டின் மொத்த கோழி இறைச்சி உற்பத்தியில் 12.34 சதவீதமாகும். இதேபோல் 2016-17 ஆம்ஆண்டில் 16.68 பில்லியன் முட்டை உற்பத்தியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது மற்றும் நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் (APEDA) 18.93 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இந்திய கோழிப்பண்ணை தொழில்நுட்பத்தில் இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் மற்றும் தன்னியக்கமாக்கல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு, வெறும் கொல்லைப்புறநடவடிக்கையில் இருந்து ஒரு பெரிய வணிக நடவடிக்கையாக மாற்றியமைப்பது இந்திய கோழித்தொழிலின் மிகமுக்கியமான அம்சமாகும். எனவே, இன்றைய கோழிப்பண்ணை தொழில்துறைக்கு கோழிஉற்பத்தி, பொறியியல் மற்றும் செயலாக்கதொழில்நுட்பம் ஆகிய வற்றில் போதுமான அறிவைக் கொண்டதிறமையான மனிதவளம் அதன்நிலைத்தன்மை மற்றும் மேலும் வளர்ச்சிக்குதேவைப்படுகிறது.
கோழியின தொழிலின் மனித தொழில்நுட்ப தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், 2011-12 ஆம் ஆண்டில் ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியைத் 80 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கியது. இக்கல்லூரியில் B.Tech (கோழி தொழில்நுட்பம்) என்ற தனித்தன்மை வாய்ந்த பட்டப்படிப்பை வழங்குகிறது, இது 40 மாணவர்களின் வருடாந்திர உட்கொள்ளும் திறன்கொண்டது.கோழிஉற்பத்தி தொழில்நுட்பங்கள், கோழிப்பண்ணை பொறியியல் மற்றும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள் உட்பட கோழி வணிக மேலாண்மை போன்ற பிரிவிகளில் பி.டெக்., (கோழி தொழில்நுட்பம்) 8 தவணை (semester) வழங்கப்படும். தேர்ச்சிபெற்ற அனைத்து பட்டதாரிகளும் வளாக நேர்காணல் முலம் பன்னாட்டு நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர்.


பார்வை

  • கோழிப்பண்ணைத் தொழிலின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனத்தை நிறுவுதல்.

முக்கிய நோக்கங்கள்

  • கோழிப் பொறியியல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த திறன்களைக் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குதல்.
  • கோழி வளர்ப்பு சார்ந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில்துறை இணைப்புக்கு பொருத்தமான உள்கட்டமைப்பை நிறுவுதல்.
  • கோழித் தொழிலின் மாறிவரும் தேவையைப் பூர்த்திசெய்ய மனிதவளத்தை மேம்படுத்துதல்.
  • பன்முகப்படுத்தப்பட்ட கோழி வளர்ப்பில் விவசாய சமூகத்திற்கு சாத்தியமான நிறுவனமாக இருப்பதை உறுதிசெய்தல்.

குறிக்கோள்கள்

  • கோழிஉற்பத்தி, பொறியியல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்தகல்வித் திட்டங்களை வழங்குதல்
  • கோழிப்பண்ணை தொழில் முனைவோர்களுக்கும் பன்னாட்டு நிறுவனத்திற்கும் இடையேவலுவான தொடர்புகளை உருவாக்குதல்.

ஆசிரியர்கள்

அனுபவம் வாய்ந்த, அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் முன்னிலையில் மட்டுமே தரமான கல்வி சாத்தியமாகும். கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் ஒவ்வொரு 9 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் இருப்பதன் மூலம் வளப்படுத்தப்படுகிறது.

  • பேராசிரியர்கள் - 2
  • இணைப் பேராசிரியர்கள் - 4
  • உதவிப் பேராசிரியர்கள் - 5

மேலும் தகவலுக்கு:

முனைவர். எஸ்.டி. செல்வன்
முதல்வர்,
கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி,
ஓசூர் - 635 110, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-4344-295162: மொபைல்:+91-9444227466 |+91-9940178909
மின்னஞ்சல்: deancppm@tanuvas.org.in