| ஆண்டு | முக்கிய சாதனை |
|---|---|
| 2011-12 | பி.டெக் (கோழி உற்பத்தி தொழில்நுட்பம்) ஆண்டுக்கு 20 மாணவர்களுடன் சென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரி (CFDT) வளாகத்தில் ஆரம்பத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட்டது. |
| 2013-14 | கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை நிறுவனம், ஓசூர், கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியாக (CPPM), தரம் உயர்த்தப்பட்டது. |
| 2014-15 | பி.டெக் (கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) கல்லூரி வளாகம், கொடுவள்ளி உணவு மற்றும் பால் தொழில்நுட்ப கல்லூரியில் இருந்து ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரிக்கு இடம் மற்றம் செய்யப்பட்டது |
| 2015-16 | முதல் தொகுதி பி.டெக் (கோழி உற்பத்தி தொழில்நுட்பம்) மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தல் |
| 2016-17 | பி.டெக் (கோழி உற்பத்தி தொழில்நுட்பம்) பட்டப்படிப்பு பி.டெக் (கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது |
| 2017-18 | ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 20ல் இருந்து 40 ஆக உயர்தப்பட்டன |
| 2019-20 | முதுகலை பட்டப்படிப்பு - எம்.டெக் (கோழி வளர்ப்பு தொழில் நுட்பம்) திட்டம் ஆரம்பிக்கப்பட்டது |