இக்கல்லூரி விவசாய சமூகம் மற்றும் தொழில்முனைவோர் நலனுக்காக பல விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இக்கல்லூரியில் உள்ள கோழிப்பண்ணை வளாகம், தொழில்முனைவோருக்கான "மாதிரி செயல்விளக்கப் பிரிவாக" செயல்படுகிறது. இது “கோழி விதை உற்பத்தி மையமாக” செயல்பட்டு, அசீல், கடக்நாத், சிட்டகாங், நிகோபாரி ஆகிய நாட்டுக் கோழிகளின் தரமான கோழிக்குஞ்சுகளையும், மற்றும் தொழில்முனைவோருக்கு மேம்படுத்தப்பட்ட வனராஜா, கிராமப்பிரியா ஆகிய கோழி வகைகளையும் உற்பத்தி செய்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்குகிறது. . கூடுதலாக, இந்த நிறுவனம் விவசாயிகளுக்கு ஜப்பானிய காடை, வான்கோழி மற்றும் கினி கோழி போன்ற பல்வகைப்பட்ட கோழி இனங்களின் குஞ்சுகளையும் வழங்குகிறது. மேலும், இந்த நிறுவனம் தனுவாஸ் ஸ்மார்ட் தாது கலவை மற்றும் தரமான கோழி மற்றும் கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்து பல்வேறு அரசாங்க அமைப்புகள், பிரிவுகள் மற்றும் விவசாய சமூகதிற்கு வழங்குகிறது.