கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

மனித மற்றும் விலங்கினத்திற்கிடையே பரவும் நோய்கள் ஆராய்ச்சிக்கூடம்


தொற்று நோய்த் தாக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகத்தின் கால்நடை நலக்கல்வி மையத்தின் கீழ் லெப்டோஸ்பைரோஸிஸ் நோய் கண்டறியும் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்கள்

  • மனித மற்றும் விலங்கினத்திற்கிடையே பரவும் நோய்களைக் கண்டறியத் தேவையான உள்கட்ட அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மனித மற்றும் விலங்கின மாதிரிகளில் நோய் கண்டறியும் சேவையை அளித்தல்
  • மனித மற்றும் விலங்கினத்திற்கிடையே பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, சார்புத் துறைகளுடன் இணைந்து கண்காணிப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
  • சார்புத் துறை அலுவலர்களுக்கு மனித மற்றும் விலங்கினங்களுக்கிடையே பரவும் நோய்களைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த பயிற்சி அளித்தல்
வ.எண். நோய் சோதனை கட்டணம் (ரூ.)* முடிவு அறிவிக்கப்படும் காலம் / நேரம்
1 எலிக் காய்ச்சல் இருள் படர்ந்த நுண்ணோக்கியல் 40 அதே நாள்
நுண்ணோக்கி வழி உயிரணுத் திரட்டலைக் கண்டறியும் சோதனை 300 அதே நாள்
ஐ.ஜி.எம். எலைசா / ஐ.ஜி.ஜி. எலைசா 500 அதே நாள்
பன்பெருக்கத் தொடர்வினை 500 இரண்டு நாட்கள்
நுண்ணுயிரி வளர்ப்பு 500 குறைந்தது 1-8 வாரம்
ஒளி உமிழ் எதிரணு கண்டறியும் சோதனை 300
2 கன்று வீச்சு நோய் ரோஸ்பெங்கால் நிறமி கொண்டு தட்டுகளில் உயிரணுத் திரட்டலைக் கண்டறியும் சோதனை 50 அதே நாள்
குழாயில் உயிரணுத் திரட்டலைக் கண்டறியும் சோதனை 100 அதே நாள்
ஐ.ஜி.எம்/ஐ.ஜி.ஜிஎலைசா 500 அதே நாள்
பன்பெருக்கத் தொடர்வினை 500 இரண்டு நாட்கள்
நுண்ணுயிரி வளர்ப்பு 520 குறைந்தது ஒரு வாரம்
3 அடைப்பான் நிறமூட்டல் முறை 100 அதே நாள்
நுண்ணுயிரி வளர்ப்பு 500 மூன்று நாட்கள்
பன்பெருக்கத் தொடர்வினை 500 இரண்டு நாட்கள்
விலங்கினச் சோதனை 1000 குறைந்தது ஒரு வாரம்
4 விலங்கின உணவு மற்றும் உணவுப் பொருட்கள் ** முறை-அ- நுண்ணுயிரியைத் தனியே பிரித்து நுண்ணோக்கிவழி கண்டறிதல் செய்முறை எண். 5.5.1.1 500 மூன்று நாட்கள்
பன்பெருக்கத் தொடர்வினை மூலம் நுண்ணுயிரியைக் கண்டறிதல் செய்முறை 5.5.3.2 900 இரண்டு நாட்கள்
உயிர் வேதியியல் சோதனை செய்முறை எண்.5.5.2 500 குறைந்தது ஒரு வாரம்
இரத்த ஊடகத்தில் வளர்ந்த நுண்ணுயிரிகளைப் பாலிகுரோம் மெத்திலின் நீல நிறமிகள் மூலம் நிறமூட்டிக் கண்டறிதல் செய்முறை எண்.5.5.3.1 500 நான்கு நாட்கள்

*அனைத்துப் பரிசோதனைகளுக்கும் GST 18% கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

**இந்தியத் தரச் சான்றிதழ் 15784 (பகுதி-3): 2020 குறிப்பிட்ட முறைப்படி விலங்கின உணவு மற்றும் உணவுப் பொருட்களில் (நுண்ணுயிரி முறைகள்) அடைப்பான் நுண்ணுயிரியைக் கண்டறிதல்.

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
மனித மற்றும் விலங்கினங்களுக்கிடையே பரவும் நோய்கள் ஆராய்ச்சிக்கூடம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை – 600 051.
தொலைபேசி : 044-25559306 / 044 – 25555151
மின்னஞ்சல் : leptolab@tanuvas.org.in