கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

தடுப்பூசி ஆராய்ச்சி மையம் (நச்சுயிரித் தடுப்பூசிகள்)


தடுப்பூசி ஆராய்ச்சி மையம் (நச்சுயிரித் தடுப்பூசிகள்) 1993ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.

குறிக்கோள்

  • கால்நடை மற்றும் கோழிகளைத் தாக்கும் நச்சுயிரிகளிருந்து பாதுகாக்க, தடுப்பூசிகள் தயாரிப்பது இம்மையத்தின் குறிக்கோளாகும்.
  • தரம் வாய்ந்த மற்றும் குறைந்த விலையிலான நச்சுயிரித் தடுப்பூசிகளை, கால்நடை மற்றும் கோழி விவசாயிகளுக்கு வழங்குதல்
  • புதிய மற்றும் மீண்டும் தோன்றும் நச்சுயிரி நோய்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி தயாரித்தல்
  • கால்நடை மற்றும் கோழியினங்களில் நோய் பெருந்தொற்று காணும் போது காரணிகளை ஆராய்ந்தறிதல்

உள்கட்டமைப்பு

  • செல்/திசு வளர்ப்பு ஆய்வகத்தில் நச்சுயிரிகளை வளர்ப்பதற்கும், ஆராய்ச்சி தடுப்பூசி உருவாக்கவும் வசதிகள்
  • ஊநீர் ஆய்வகத்தில் நோய் எதிர்ப்பு அளவினை ஆராய்தல்
  • மரபு கூறு நச்சுயிரியல் ஆய்வகத்தில் நச்சுயிரிகளின் மரபணு மாற்றங்களையும், புது மரபணு வகைகளையும் மற்றும் மரபணு சார்ந்த பிற அம்சங்களையும் ஆராய்தல்
  • ஆடுகளைத் தாக்கும் நீல நாக்கு நோய் நச்சுயிரியைப் பரப்பும் கூலிகாய்டஸ் வகை கொசுக்களை ஆராய்தல்

கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள்

  • செயலிழக்கப்பட்ட தடுப்பூசி - கம்போரா நோய்
  • செயலிழக்கப்பட்ட ஹைட்ரோ பெரிகார்டியம் நோய்த் தடுப்பூசி
  • செயலிழக்கப்பட்ட வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பூசி
  • வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசிக்கான ஊக்குவிப்பான்
  • செயலிழக்கப்பட்ட செம்மைப் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
  • செயலிழக்கப்பட்ட நீல நாக்கு நோய்த் தடுப்பூசி

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
தடுப்பூசி ஆராய்ச்சி மையம் -நச்சுயிரித் தடுப்பூசிகள்,
கால்நடை நலக் கல்வி மைய இயக்ககம்,
தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051.
தொலைபேசி: +91-44 2555 4555
மின்னஞ்சல்: vrcvv@tanuvas.org.in