கோழியின ஆராய்ச்சி நிலையம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை

வரலாறு

  • கோழியின ஆராய்ச்சி நிலையம் 1941ஆம் ஆண்டு சென்னை நந்தனத்தில், கோழியினம் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிறுவப்பட்டது.
  • 2011 ஆண்டு இந்நிலையம் மாதவரம் பால்பண்ணை வளாகத்திற்கு மாற்றப்பட்டு, இயங்கி வருகிறது.

குறிக்கோள்

  • இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு பறவை இனங்களைப் பற்றி கற்பித்தல், மேம்படுத்தப்பட்ட உயரிய கோழியினங்கள் குறிப்பாக பல வண்ண நிறமுடைய இறைச்சிக்கோழிகள், புறக்கடை வளர்ப்பிற்கு உகந்த முட்டை கோழியினங்கள், அலங்கார கோழியினங்கள், ஜப்பானியக் காடைகள், வான்கோழி மற்றும் கினிக்கோழியினங்களை வழங்குதல்.
  • கோழியின உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கோள்ளுதல்.
  • புதிய வகை கோழியினங்கள், காடை வகைகள், வான்கோழிகள் மற்றும் கினிக்கோழிகளை மேம்படுத்தப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவாக்குதல்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் நாட்டுவகை கோழியினங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல்.

சேவைகள்

  • கோழி, ஜப்பானியக் காடை, வான்கோழி மற்றும் கினிக்கோழி ஆகியவற்றில் தேவையின் அடிப்படையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  • ஆராய்ச்சித் திட்டங்களின் முக்கிய கண்டுபிடிப்புகளை, பல்கலைக்கழக மையங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்குதல்.
  • செயற்கை முறை கருவூட்டல் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்திய தட்பவெப்ப சூழ்நிலைக்கு உகந்த, புதிய இனங்களை உருவாக்குதல்.
  • புதிய வகை தனுவாஸ் முட்டை காடைகள், தாய் இறைச்சி காடை வகைகள், வணிக ரீதி கலப்பின காடை வகைகளை உருவாக்குதல்.
  • வான்கோழிகளில் உடல் எடையை அதிகரிக்கத் தேiவாயன ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளல்.
  • வெள்ளை இரக கினிக்கோழிகளை உருவாக்கி அறிமுகப்படுத்துதல்.
  • கருவுறுதல் மற்றும் குஞ்சுபொரிப்பு திறனை அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட இனவிருத்தி ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளல்.

கல்வி

இளநிலை

  • பல்கலைக்கழகத்தின் அனைத்து கால்நடை மருத்துவக்கல்லூரிகளின் இளநிலை பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுத்தல்.

முதுநிலை

  • கோழியின அறிவியல் சம்பந்தப்பட்ட முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தக்க வசதிகளை அளித்தல்.
  • சென்னை மற்றும் சுற்றியுள்ள கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிக்குத் தேவையான கருமுட்டை, அடைகாத்த முட்டை மற்றும் கோழியினங்களை கொடுத்து உதவுகிறது.
  • இதன் மூலம் 36 பேர் முனைவர் பட்டமும் மற்றும் 124 பேர் முதுகலை பட்டமும் பெற்றுள்ளனர்.

சாதனைகள் மற்றும் வெளியிடப்பட்ட தொழில்நுட்பங்கள்

அதிக உற்பத்தித் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு கொண்ட கோழி, ஜப்பானியக் காடை, வான்கோழி மற்றும் கினிக்கோழிகளை இவ்வாராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. அவை நந்தனம் கோழி 1, நந்தனம் இறைச்சிக்கோழி 2, நந்தனம் இறைச்சிக்கோழி 3, நந்தனம் கோழி 4, தனுவாஸ் அசீல், நந்தனம் காடை 1, நந்தனம் காடை 2, நந்தனம் காடை 3, நந்தனம் வான்கோழி 1, நந்தனம் வான்கோழி 2 மற்றும் நந்தனம் கினிக்கோழி

நந்தனம் கோழி 1 (1986)

  • பல வண்ண நிறமுடைய, முட்டை மற்றும் இறைச்சிக்கு உகந்த அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இனமாகும். ஆண்டுக்கு 180 முட்டைகள் வரை இடும்.
  • 12வது வார உடல் எடை 1 கிலோவாகும்.

நந்தனம் இறைச்சிக்கோழி 2 (1988)

  • பல வண்ண நிறமுறைய வண்ண இறைச்சிக்கோழி
  • 8வது வார உடல் எடை 1.44 கிலோ; உயிர் வாழும் திறன் 97 சதவீதம்; தீவன மாற்றுத்திறன் 2.66

நந்தனம் கோழி 4 (2013)

  • முட்டை உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட நாட்டுக்கோழி.
  • ஆண்டிற்கு 225 முட்டைகள் வரை இடும்.

தனுவாஸ் அசீல் (2017)

  • ஆண்டுக்கு சராசரியாக 160 முட்டை வரை உற்பத்தி செய்து, அவற்றில் சராசரியாக 112 குஞ்சுகள் பெற முடியும்.
  • முட்டை மற்றும் இறைச்சிக்கு உகந்த நாட்டுக்கோழியாகும்.

நந்தனம் இறைச்சிக்கோழி 3 (2017)

  • எட்டுவாரங்களில் 1.30 கிலோ எடை; தீவனமாற்றுத் திறன்-2.50
  • உயிர் வாழ் திறன்- 95 விழுக்காடு
  • 12 வார உடல் எடை 1850 கிராம்

நந்தனம் காடை 3 (2004)

  • இறைச்சிக்கான தரம் உயர்த்தப்பட்ட காடை
  • 6வது வார ஆண் காடை உடல் எடை - 200 கிராம் மற்றும் பெண் காடை உடல் எடை 247 கிராம்

நந்தனம் வான்கோழி 1 (2008)

  • பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை மற்றும் நாட்டு வகைவான் கோழியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலப்பின கருப்பு மற்றும் வெள்ளை இறகுடைய வான்கோழி.
  • 16வது வார உடல் எடை - 1680 கிராம்.

நந்தனம் வான்கோழி 2 (2013)

  • பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை வான்கோழியினை பயன்படுத்தி தக்க இனப்பெருக்க மேலாண்மையை நடைமுறைப்படுத்தி, உருவாக்கப்பட்ட வான்கோழி.
  • 16வது வார உடல் எடை- 3020 கிராம்; உயிர் வாழும் திறன் -95 விழுக்காடு

நந்தனம் கினிக்கோழி 1 (2013)

  • இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக்கு உகந்த முத்து இரக கினிக்கோழி.
  • மேம்படுத்தப்பட்ட உடல் எடை (12வது வார வயதில்) 950-1000 கிராம்.

விலைப்பட்டியல்

கோழியினங்கள் ஒரு நாள் கோழி குஞ்சு ரூ.
வெள்ளை லெகன்/ ரோடு ஐலன் ரெட்/ நந்தனம் முட்டை கோழி 4 25
நந்தனம் இறைச்சிக்கோழி 2 / நந்தனம் இறைச்சிக்கோழி 3 / கலப்பின இறைச்சிக்கோழி வகைகள் 25
தனுவாஸ் அசில்/ அசில் கலப்பின வகை / நிக்கோபாரி/ சிறுவிடை 40
கடக்நாத்/ பெறுவிடை/ அலங்கார கோழிகள் 50
நந்தனம் காடை வகைகள் 7
நந்தனம் வான்கோழி 1 / நந்தனம் வான்கோழி 2 70
நந்தனம் கினிக்கோழி 25

வல்லுநர்கள்

  • க. சங்கிலிமாடன், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • சு. எழில்வளவன், பேராசிரியர்
  • சி. பாண்டியன், உதவிப் பேராசிரியர்
  • பா. வசந்தி, உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கோழியின ஆராய்ச்சி நிலையம்,

மாதவரம் பால் பண்ணை,

சென்னை – 600 051

தொலைபேசி: 044-25552650, 25552600

மின்னஞ்சல்: ippm@tanuvas.org.in