கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடைத் தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான மருந்துக் கண்காணிப்பு ஆய்வகம்


 • கால்நடைத் தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான மருந்துக் கண்காணிப்பு ஆய்வகம் ஆய்வகங்களுக்கான தேசியத்தர அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடமாகும்.
 • இது கால்நடைத் தீவனம் மற்றும் தீவனப் பொருட்களில் உள்ள நச்சுத்தன்மைகளைக் கண்டறியக்கூடிய சோதனை ஆய்வுக்கூடமாகும்

குறிக்கோள்

 • கால்நடை மருந்துகள் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வளர்ச்சி ஊக்குவிப்பிகள், ஆன்டெல்மெனிடிக்ஸ்) மீது நிலையான மருந்தக விழிப்புணர்வோடு இருத்தல்
 • தமிழ்நாட்டில் தீவனம் மற்றும் உணவுப்பொருட்களில் கால்நடை மருந்துகளின் அளவுகள் குறித்த தரவுத்தளத்தை உருவாக்குதல்
 • கால்நடைத் தயாரிப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருந்துகளைக் கண்காணித்தல்.

பரிசோதனைகள்

இவ்வாய்வகத்தில் கால்நடைத் தீவனம், தீவனப் பொருட்கள், தீவனப் பயிர்கள், இறைச்சி, முட்டை, பால், திசுக்கள், உறுப்புகள், இரைப்பை மற்றும் குடல் உள்ளடக்கங்கள், பாரம்பரிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற மாதிரிகளிலிருந்து கீழ்க்கண்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

பூஞ்சை நச்சுகள்:

 • அஃப்லாடாக்சின், ஓக்ரடாக்ஸின், சிட்ரினின், பென்சிலிக் அமிலம், டி-2 டாக்ஸின், ஜீரலெனோன்

பூச்சிக்கொல்லிகள்:

 • ஆர்கனோக்ளோரின், ஆர்கனோபாஸ்பரஸ், கார்பமேட், பைரெத்ராய்டுகள்

கால்நடை மருந்துகள் தடை செய்யப்பட்ட மருந்துகள்:

 • குளோராம்பெனிகால், நைட்ரோஃபுரான்ஸ், சல்பனமைடுகள், என்ரோஃப்ளாக்சசின

அனுமதிக்கப்பட்ட மருந்துகள்:

 • டெட்ராசைக்ளின், மேக்ரோலைடு, பீட்டாலாக்டம்

கலப்படங்கள்:

 • மெலமைன்ஃயூரியா

நோய்ப் பரவலில் மருந்து:

 • நைட்ரேட் ஃநைட்ரைட், துத்தநாகபாஸ்பைடு, யூரியா நச்சுத்தன்மை, ஹைட்ரோசியானிக் அமில நச்சுத்தன்மை

பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டிய மாதிரியின் அளவு

 • கூட்டுத் தீவனம் / தீவனப் பொருட்கள்: 250-500 கிராம்
 • உயிர் மாதிரிகள்: நிறைவுற்ற உப்பில் குறைந்தபட்சம் 50 கிராம்
 • பால் : 100 மில்லி லிட்டர்
 • இறைச்சி : 200-250 கிராம்
 • முட்டை: 6 - 10 எண்ணிக்கை
 • தீவனப் பயிர்கள்: 500 கிராம்

பரிசோதனைக்கான கட்டண விவரங்கள்

பரிசோதனைகள் ஆய்வு முறைகள் கட்டணம் (ரூ.)
மாணவர்கள் தமிழகம் பிற மாநிலம்

பூச்சிக்கொல்லிகள்

ஆர்கனோக்ளோரின், ஆர்கனோபாஸ்பரஸ்,கார்பமேட், பைரெத்ராய்டுகள் தின் லேயர் குரோமேட்டகிராபி 300 400 500
கேஸ் குரோமேட்டகிராபி 800 1200 1300
கேஸ் குரோமேட்டகிராபி மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் 750 1200 1300

கால்நடை மருந்துகள்

குளோரா டெட்ராசைக்ளின், என்ரோஃப்ளாக்சின், சிப்ராஃப்ளாக்சின், சலினோமைசின், டயாமுலின், டைலோசின் தின் லேயர் குரோமேட்டகிராபி 300 400 500
ஹை பர்பாமன்ஸ் லிகுட் குரோமேட்டகிராபி 800 1200 1300
குளோராம் பெனிகால், புயுரோசோலிடான் மெடபாலைட்ஸ் லிகுட் குரோமேட்டகிராபி மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் 1000 1500 2000

பூஞ்சை நச்சுகள்

அஃப்லாடாக்சின் மல்டி மைகோடாக்சின் தின் லேயர் குரோமேட்டகிராபி 250 300 350
ஓக்ரடாக்ஸின், சிட்ரினின், பென்சிலிக் அமிலம், டி-2 டாக்ஸின், ஜீரலெனோன் ஹை பர்பாமன்ஸ் தின் லேயர் குரோமேட்டகிராபி 800 1200 1300
ஓக்ரடாக்ஸின், சிட்ரினின், பென்சிலிக் அமிலம், டி-2 டாக்ஸின், ஜீரலெனோன் ஹை பர்பாமன்ஸ் லிகுட் குரோமேட்டகிராபி 800 1200 1300
நைட்ரேட் / நைட்ரைட் 300 600 1000
யூரியா நச்சுத்தன்மை 200 250 300
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களைக் கண்டறிதல் பிசிஆர் 5000 8000 10000
எப் டி ஐ ஆர் 150 200 300
ஐ சி பி எம் எஸ் 1000 1500 2000
எல் சி எம் எஸ் 1000 1500 2000

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடைத் தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான மருந்துக் கண்காணிப்பு ஆய்வகம்,
கால்நடை நலக் கல்வி மைய இயக்ககம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600 051.
தொலைபேசி: +91-044-25550111
மின்னஞ்சல்: plaffs@tanuvas.org.in