ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திலுள்ள பர்கூர் மலைக்குன்றுகளை பிறப்பிடமாக கொண்ட இந்த பர்கூர் இன மாடுகள் நடுத்தர உடல்வாகு கொண்டவையாகும். இம்மாடுகளின் எண்ணிக்கை 1977-ல் 95400-ஆக இருந்து பின்னர் விரைவாக குறைந்து 2021 -ல் 42300 ஆக இருந்தது.
வேகமாக குறைந்து வரும் இம்மாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க பர்கூரில் ஒரு ஆராய்ச்சி நிலையம் 01.07.2015 அன்று துவங்கப்பட்டது. தற்போது இவ்வாராய்ச்சி நிலையத்தில் மொத்தம் 135 பர்கூர் இன மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாராய்ச்சி நிலையம் தரமான பர்கூர் மாட்டினக் கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குகின்றது. மேலும் பர்கூர் மாடுகள் வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடு வளர்ப்பிற்கான உத்திகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றது.
நாட்டின மாடுகளின் ஆய்வு மேற்கொள்ளும் முதுநிலை மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குகிறது.
இந்நிலையம், 2018 ஆம் ஆண்டு மத்திய அரசினால் சிறந்த முறை நாட்டின மாடுகள் பராமரிப்பிற்காக தேசிய காமதேனு விருது (தென்மண்டலம்) பெற்றது. இந்நிலையம் மலைப்பகுதியிலுள்ள எருமைகளை, தனி இனமாக தேசிய விலங்கின மரபுவள வாரியம் மூலம் அங்கீகரிக்க வழிவகை செய்தது.
காளை கன்றுகள் : | ரூ.3000 முதல் ரூ. 15000 வரை |
கிடாரி கன்றுகள் : | ரூ.3000 முதல் ரூ.16000 வரை |
பால் : | ரூ.50/ லிட்டர் |
நெய் : | ரூ.1200/ லிட்டர் |
பால்கோவா : | ரூ.400/ கிலோ |
மண்புழு உரம் : | ரூ.5/ கிலோ |
உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம்,
துருசனாம்பாளைய வளாகம், பர்கூர்,
அந்தியூர் வட்டம்,
ஈரோடு மாவட்டம்- 638 501.
அலைபேசி: 95666 92227, 94427 94107