சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கோழிப்பண்ணை ஆராய்ச்சி நிலையத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு கோழி இனங்களுக்கு தீவனம் அளிப்பதற்காக முதன்முதலில் தீவனஆலைநிறுவப்பட்டது. பின்பு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பராமரிக்கப்படும் கோழிகளுக்கும் மற்றும் ஆய்வக விலங்குகளுக்கும்தேவையான தீவனங்களை இத்தீவன ஆலை தயாரித்து கொடுத்தது. 01.04.2003 முதல் இந்த தீவன ஆலையானது ஒரு சுய நிதிப் பிரிவாக மாற்றம் செய்யப்பட்டது. இந்ததீவனஆலையில்தயாரிக்கப்படும்பல்வேறு வகையான கால்நடை மற்றும் கோழி தீவனங்கள், தனுவாஸ் தாதுஉப்பு கலவை மற்றும் தனுவாஸ் ஸ்மார்ட் தாதுஉப்பு கலவைஆகியவைதமிழ்நாடுகால்நடைமருத்துவஅறிவியல்பல்கலைகழகத்தின்பல்வேறு தொகுதிகளுக்கும், தமிழ்நாடுகால்நடை பராமரிப்புத் துறையின் மாவட்ட கால்நடை பண்ணைகள்,கல்வி நிறுவனங்கள், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கால்நடை வளர்க்கும்பண்ணையாளர்களுக்கும் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்தஆலையானது 2009-ல்மைய தீவன தொழில்நுட்ப பிரிவு(CFTU) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பிரிவானது, ஆண்டுதோறும் தோராயமாக 1800 - 2000 மெட்ரிக் டன்கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் மற்றும் 150 மெட்ரிக் டன்தாதுஉப்பு கலவையைதயாரிக்கிறது.
தனுவாஸ் தாதுஉப்பு கலவையானது சுண்ணாம்பு, மணிச்சத்து, மெக்னீசியம், சோடியம் மற்றும் குளோரின் போன்ற முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், கோபால்ட், அயோடின் மற்றும் செலினியம் போன்ற குறைந்த அளவில் தேவைப்படும் தாதுஉப்புக்கள் கொண்ட ஒரு கலவையாகும். இத்தாது உப்புக்கலவையானது 2005 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டுவிற்பனைச் செய்யப்படுகின்றது. "தனுவாஸ் தாதுஉப்பு கலவை" ஆனது பல்வேறு கால்நடை பண்ணையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த "தனுவாஸ் தாதுஉப்பு கலவை" ஆனது தமிழ்நாடுகால்நடைமருத்துவஅறிவியல்பல்கலைக்கழகத்தின் அனைத்து கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு தமிழ்நாட்டிலிலுள்ள அனைத்து கால்நடை வளர்ப்போரும்பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இத்தாதுஉப்பானது, கால்நடை அபிவிருத்திக்காக பல்வேறுதிட்டங்களின் மூலம் தமிழ்நாடு கால்நடைபராமரிப்புதுறையால் விநியோகிக்கப்படுகிறது. பால் உற்பத்தியை மேம்படுத்துவதில் இந்த தனுவாஸ் தாதுஉப்பு கலவையானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இக்கலவையினை பயன்படுத்துவதனால் மிக குறைந்த உற்பத்தி செலவிலேயே 10 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதை ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டுள்ளது..
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மைய தீவன தொழில்நுட்ப பிரிவு
காட்டுப்பாக்கம், செங்கல்பட்டுமாவட்டம் – 603 203
தொலைபேசி எண்: +91-96772 48311
மின்னஞ்சல்: cftu@tanuvas.org.in