vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

தோற்றம்

புகழ் பெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கழைக்கழகத்தின் 6 – வது உறுப்புக்கல்லூரியாக கால்நடைமருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம், தேனிமாவட்டம், வீரபாண்டியில்தொடங்கப்பட்டுள்ளது.


மாணவர்களுக்குத் தரமான கால்நடை மருத்துவக்கல்வியை வழங்குதல், நடைமுறை மற்றும் களம் சார்ந்த ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு மாற்றுதல் ஆகியவற்றை முதன்மை இலக்குகளாகக் கொண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இக்கல்லூரி கல்வி இண்டர்நெஷனல் பப்ளிக் பள்ளியில் வாடகைவளாகத்தில் இயங்கிவருகிறது. தேனியிலிருந்து சுமார் 12 கி.மீ ( தேசியநெடுஞ்சாலை 85 தேனி – கம்பம் வழியாக) தொலைவில் 237 ஏக்கர்பரப்பளவில் நிரந்தரவளாகம் கட்டப்பட்டுமுடிக்கும் தருவாயில்உள்ளது. இங்குநிர்வாகக்கட்டிடம், கால்நடைசி கிச்சை வளாகம், கால்நடைப்பண்ணைவளாகம், வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் மாணவ, மாணவியர், விடுதிக்காப்பாளர், முதல்வர் ஆகியோருக்கான தனித்தனியான விடுதிகள், உணவகம்ஆகியவைஅமைந்துள்ளன.

ஊழியர்கள்/பணியாளர்கள்

கால்நடைமருத்துவக்கல்வியில்சிறப்பும், அனுபவமும் வாய்ந்த சர்வதேச தரத்திலான பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்களை, கொண்டது இக்கல்லூரி. நிர்வாக அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் எலக்ட்ரீசியன் போன்றஊழியர்களும் நிர்வாகவசதிக்காகஉள்ளனர். தவிர, தற்போது கல்லூயில் தினசரி செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஓட்டுநர்கள் உள்ளிட்ட 27 ஒப்பந்ததொழிலாளர்கள்உள்ளனர். மேலும்கல்லூரி, விடுதி மற்றும் பண்ணை வளாகத்தை 24 மணிநேரமும் கண்காணிக்க பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • பேராசிரியர்கள் - 8
  • இணைப் பேராசிரியர்கள் - 7
  • உதவிப் பேராசிரியர்கள் - 23

மேலும் தகவலுக்கு:

முனைவர் பி.என். ரிச்சர்ட் ஜெகதீசன்
முதல்வர்,
கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
தொலைபேசி: +91-4546-235400
மின்னஞ்சல்: deanvcritheni@tanuvas.org.in