vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

விளையாட்டு

விளையாட்டு தினம்

தேனியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2021-ம் ஆண்டில் உடற்கல்வித் துறையானது கிரிக்கெட்,பூப்பந்து, கைப்பந்து, குண்டுஎறிதல், ஈட்டி எறிதல், மற்றும் வட்டு எறிதல், த்ரோபால், கோ-கோ போன்ற மைதான விளையாட்டுகளும் கேரம் மற்றும் செஸ் உள்ளிட்ட உட்புற விளையாட்டுகளுக்கான வசதிகளும் தற்காலிக வளாகத்தில் அமையப்பெற்றுள்ளது. 1,24,51,2.00 ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் வாங்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. MSVE 2016 வழிகாட்டுதலின்படி விளையாட்டு மற்றும் விளையாட்டு பயிற்சியானது மூன்றாம் தொழில் முறை ஆண்டில் ஒருபாடமாக்கப்பட்டுள்ளது. (0+1)

  • இத்துறையின் முக்கிய மைல் கல்லாக 2022 ஆம் ஆண்டிற்கான “ரேடியன்ஸ்” என பெயரிடப்பட்ட முதல் ஆண்டு விளையாட்டு தினம் செப்டம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. மாணவியருக்கான த்ரோபால் நிகழ்வு திறந்து வைக்கப்பட்டது. மேலும், ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான டென்னிகாய்ட், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற போட்டிகள் ஆண், பெண் இரு பாலருக்கும் நடத்தப்பட்டன.
  • ஆண்களுக்கான முதன்மை விளையாட்டு வீரர் விருதை இரண்டாம் ஆண்டு மாணவன் செல்வன் பி.ராஜாவும், பெண்களுக்கான முதன்மை விளையாட்டு வீராங்கனை விருதை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி ஜே.சக்தியும் பெற்றனர்.
  • தேனி நிரந்தர வளாகத்தில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்பந்து மைதானம் மற்றும் 200 மீட்டர் பாதையுடன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்யேக கைப்பந்து மைதானம்,கிரிக்கெட் மைதானம், கூடைபந்து மைதானம் மற்றும் பெண்களுக்கான த்ரோபால் மைதானம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • தற்போது கால்நடை மருத்தவ நுண்ணுயிரியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் பி.சுரேஷ் விளையாட்டு செயலாளராகவும், இணைப்பேராசிரியை முனைவர் கோ.சுகன்யா கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் துறை, மற்றும் முனைவர் கி.பத்மநாத் உதவிப்பேராசிரியர், கால்நடை மருத்துவ வளாகம் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி. இணை விளையாட்டு செயலாளராக உள்ளனர்.
  • “ரேடியன்ஸ்” 2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளை நமது பல்கலைக்கழகப்பதிவாளர் புறாக்களைபறக்கவிட்டு, தொடங்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.