கோழியினம் மற்றும் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்களைக்
கண்டறிதல், ஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல்
கோழியினம் மற்றும் கால்நடைகளுக்கு வரும் நோய்களை, ஆய்வகப்
பரிசோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றிற்கான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும்
நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்
களப் பிரச்சனைகளைக் கண்டறிந்து, ஆராய்ச்சிகளை
மேற்கொள்வதுடன், அவற்றிற்கான முடிவுகளை, கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்குத்
தேரிவித்தல்
சேவைகள்
பண்ணையில் இறக்கும் கோழிகளை ஆய்வுசெய்து, என்ன நோயில்
கோழிகள் இறந்தன எனக் கண்டறிந்து ஆலோசனை கூறுதல்
பண்ணையில் ஏற்படும் நோய்ப் பிரச்சனைகளுக்கு நேரில் சென்று
ஆய்வு செய்தல், மாதிரிகள் சேகரித்து ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தி உரிய இழப்பீடு அளித்தல்
கோழிகளில் இரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வகச் சோதனைக்கு
உட்படுத்தி இராணிக்கெட் (ND) மற்றும் சிறு மூச்சுக்குழல் நோய்க்கு (IB) எதிராக எதிர்ப்புச்
சக்தி உள்ளதா என்று கண்டறிந்து தடுப்பூசிகளைப் பரிந்துரை செய்தல்
கோழிகளின் நோய்க்கெதிராக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை
ஆய்வகச் சோதனை மூலம் (ABST) கண்டறிந்து சரியான நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பரிந்துரை
செய்தல்
கோழிப் பண்ணைகளில் குடிநீரில் நோய்க்கிருமிகள் உள்ளனவா என
ஆய்வகப் பரிசோதனை செய்து, நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் இருப்பின் கிருமிநாசினிகளைப் பரிந்துரை
செய்தல்
கோழித்தீவனம், தீவனச் சேர்க்கைகள் மற்றும் தீவன
மூலப்பொருட்களில் நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் உள்ளதா என ஆய்வகச் சோதனைக்கு உட்படுத்தி இழப்பீடு
வழங்கக்கூறுதல்
கோழிப்பண்ணைகள் மற்றும் குஞ்சுப் பொரிப்பகங்களின்
கொட்டகைகளில் சுற்றுப்புறச்சூழலில் நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் உள்ளதா என ஆய்வகச் சோதனையில்
கண்டறிந்து இழப்பீடு வழங்கக்கூறுதல்
பண்ணைக்கே ஆய்வக அறிவியலாளர்கள் பயணம் செய்து
பண்ணையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல்
ஆய்வகத்தைத் தேடி வரும் பண்ணையாளர்களுக்கு அவர்களின்
பிரச்சனைகளை அறிந்து ஆலோசனை கூறுதல்
தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர், கோழியின நோய் ஆய்வகம்,
345-டி, பட்டுத்துறை சாலை, தலைவாசல் - 636112,
ஆத்தூர் தாலுக்கா, சேலம் மாவட்டம்.
தொலைபேசி: 04282 – 231645;
மின்னஞ்சல்: adl-thalaivasal@tanuvas.org.in