கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

தடுப்பூசி ஆராய்ச்சி மையம் (நுண்ணுயிரித் தடுப்பூசிகள்)


தடுப்பூசி ஆராய்ச்சி மையம்-நுண்ணுயிரி தடுப்பூசி 01-04-1991 அன்று கால்நடை நல கல்வி மைய இயக்குனரின் கீழ் செயல்படும் "உறை விந்து தொழில்நுட்ப திட்டம்" ஒரு புதிய திட்ட திட்டமாக " தடுப்பூசி ஆராய்ச்சி மையம் -நுண்ணுயிரி தடுப்பூசி பிரிவை நிறுவுதல்" மூலம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த ஆய்வகம் மத்திய பல்கலைக்கழக ஆய்வக கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் செப்டம்பர் 2015 இல் பல்கலைக்கழக நிதியுடன் நிறுவப்பட்டுள்ளது.

குறிக்கோள்கள்

  • கால்நடைகள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கு தற்போதுள்ள மற்றும் புதிய நுண்ணுயிரி தடுப்பூசிகளை மேம்படுத்துதல்.
  • வெப்பத்தினால் செயலலிக்கப்பட்ட மாடு மற்றும் ஆடுகளைத் தாக்கும் ஜோனிஸ் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசியை உருவாக்குதல்.

சாதனைகள்

  • சப்பை நோய்க்கு எதிராக மாற்றியமைக்கப்பட்ட தடுப்பூசி உருவாக்கப்பட்டது.
  • கோழிகளின் கோழி காலராவுக்கு எதிராக ஒரு தன்மரபின செயலிழந்த தடுப்பூசியை உருவாக்கியது.
  • சப்பை நோய்க்கும் மற்றும் தொண்டை அடைப்பான் நோய்க்கும் எதிராக கூட்டுத் தடுப்பூசியை உருவாக்கியது.
  • கால்நடைகள் மற்றும் ஆடுகளுக்கு ஜோனிஸ் நோய்க்கு எதிராக ஒரு செயலிழந்த தடுப்பூசியை உருவாக்கியது.
  • ஜப்பானிய காடைகளுக்கான மான்ஹீமியா ஹீமோலிடிகாவுக்கு எதிராக ஒரு தன்மரபின தடுப்பூசியை உருவாக்கியது.
  • முயல்களுக்கு ஸ்னஃபிள்ஸ் தடுப்பூசியை உருவாக்கியது.
  • வாத்துகளுக்கு பாஸ்டுரெல்லா மல்டோசிடா தடுப்பூசிக்கு எதிராக ஒரு தன்மரபின தடுப்பூசியை உருவாக்கியது.

தொழில்நுட்பம் மாற்றப்பட்டது

  • மாற்றியமைக்கப்பட்ட சப்பை நோய் தடுப்பூசி - ராணிப்பேட்டையிலுள்ள தமிழக கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்திற்கு 1999 இல் வழங்கப்பட்டுள்ளது.
  • செயலிழந்த கோழி காலரா தடுப்பூசி - பெங்களூரிலுள்ள பயோவெட் (பி) லிமிடெட் நிறுவனத்திற்கு டிசம்பர் 2006 இல் வழங்கப்பட்டுள்ளது.

காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டது

  • புதுடெல்லியிலுள்ள என்.ஆர்.டி.சி மூலம் தன்மரபின கோழி காலரா தடுப்பூசி தாக்கல் செய்யப்பட்டது. (கோப்பு எண் ஐபிஆர் . /4.14.20/10047).

ஆராய்ச்சி

திட்டங்கள் நிறைவடைந்தவை

  • "சப்பை நோய்க்கும் மற்றும் தொண்டை அடைப்பான் நோய்க்கும் எதிராக கூட்டுத் தடுப்பூசியை உருவாக்குதல்" என்ற ஐசிஏஆர் திட்டம் (2005 முதல் 2008 வரை).
  • என்.ஏ.டி.பி திட்டத்தின் " சிறிய அசைபோடும் விலங்குகளைப் பாதிக்கும் புதியதாக உருவாகும் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியமான நுண்ணுயிரியல் மற்றும் நச்சுயிரி நோய்களுக்கான புதிய நோய் கண்டறியும் சாதனம் மற்றும் தடுப்பூசி விநியோக அமைப்பு. " (2010 முதல் 2012 வரை).
  • "இந்தியாவில் கால்நடை மற்றும் எருமைகளில் மான்ஹீமியா ஹீமோலிடிகாவின் பரவல் பற்றிய ஆய்வு" என்ற திட்டம் ஃபைசர் பிரைவேட் லிமிடெட் நிதியளித்தது.

தற்போதைய திட்டங்கள் (நடந்து கொண்டிருக்கிறது)

  • உயிர்த்தொழில்நுட்பவியல் துறை நிதி திட்டம் “வாத்து கொல்லைநோய் தடுப்பூசி மற்றும் மூலக்கூறு கண்டறிதலின் சரிபார்ப்பு, ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் பரிமாற்றம்” - .43.46 லட்சங்களுக்கு 31.03.21 இலிருந்து மூன்று ஆண்டுகள்.
  • உயிர்த்தொழில்நுட்பவியல் துறை நிதி திட்டம் “வாத்துக் கொல்லி நச்சுயிரியால் ஏற்படும் வாத்து கொல்லி நோய்க்கெதிரான அடையாளம்காட்டி தடுப்பூசி மற்றும் மறுஇணைப்பு புரதம் கொண்டு தயாரிக்கப்பட்ட திவா நோய் கண்டறியும் பெட்டகம் ஆகியவற்றிற்காக மேம்பட்டு திடத்தை உருவாக்குதல்” - ரூ.24.87 லட்சங்களுக்கு 25.09.18 முதல் 24.09.21 வரை மூன்று ஆண்டுகள்.
  • உயிர்த்தொழில்நுட்பவியல் துறை நிதி திட்டம் “வடகிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவின் நாட்டுப்புற வாத்து இனங்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்களின் திறன் குறித்த ஒருமித்த ஆராய்ச்சி” ரூ.20.47 லட்சங்களுக்கு 25.09.18 முதல் 24.09.21 வரை மூன்று ஆண்டுகள்.
  • உயிர்த்தொழில்நுட்பவியல் துறை - வட கிழக்கு பகுதி நிதி திட்டம் “கிளோஸ்ட்ரிடியம் பெர்ப்பிரியன்ஜென்ஸ் மற்றும் கிளோஸ்ட்ரிடியம் டிபிசில் எதிருயிரி எதிர்ப்புத்திறனுக்கான மூலக்கூறு ஆய்வு மற்றும் அதன் பொதுநலத்தில் உள்ள முக்கியத்துவம்” - ரூ.35.93 லட்சங்களுக்கு 23.05.18 முதல் 22.05.21 வரை மூன்று ஆண்டுகள்.

வி.ஆர்.சி-பி.வி இல் தடுப்பூசி விற்பனைக்கு உள்ளது:

வ. எண் தடுப்பூசி விலை (ரூ.)/ டோஸ்
1 தன்மரபின கோழி காலரா தடுப்பூசி 1.20
2 ஜப்பானிய காடைகளுக்கான தன்மரபின மன்ஹெமியா ஹீமோலிடிகா தடுப்பூசி 0.60
3 முயல்களுக்கான ஸ்னஃபிள்ஸ் தடுப்பூசி 1.20
4 வாத்துகளுக்கான தன்மரபின பேஸ்டுரெல்லோசிஸ் தடுப்பூசி 1.20

பேராசிரியர் மற்றும் தலைவர்,
தடுப்பூசி ஆராய்ச்சி மையம் -நுண்ணுயிரித் தடுப்பூசிகள்,
கால்நடை நலக் கல்வி மைய இயக்ககம்,
தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051.
தொலைபேசி: +91-44 2555 4555
மின்னஞ்சல்: vrcbv@tanuvas.org.in