கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்
தோற்றம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டு செம்மறியாட்டுப் பண்ணையாக தொடங்கப்பட்டது. பின்பு 1969 ஆம் ஆண்டு கால்நடை ஆராய்ச்சி நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சி நிலையமானது 616.72 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னைக்கு அருகாமையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், இந்த நிலையம் 12.490N அட்சரேகை மற்றும் 80.020C தீர்க்கரேகையில் அமைந்துள்ளது. இங்கு மிதவெப்ப மண்டல தட்பவெப்ப சூழல் நிலவுவதுடன் உட்சபட்சமாக 410C வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 21.50C வெப்பநிலையுமாக உள்ளது. மேலும், ஆண்டிற்கு சராசரியாக 47 – 60 மழை நாட்கள் மூலம் 1098.69 மி.மீ அளவிற்கு மழைப் பொழிவை பெறுகின்றது.
நோக்கங்கள்
இளநிலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு கால்நடை உற்பத்திக் கல்வி பற்றி கற்பித்தல்.
பல்வேறு உயர்ரக கால்நடைகளைக் கொண்ட மந்தைகளைப் பராமரித்தல்.
கால்நடைகளின் உற்பத்தி மற்றும் இனவிருத்தித்திறனை நவீன அறிவியல் தொழில்நுட்ப மேலாண்மை உத்திகளின் (கொட்டகை அமைப்பு, இனபெருக்கம், தீவன மேலாண்மை மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு முறைகள்) மூலம் மேம்படுத்துதல்.
பண்ணையாளர்களுக்கு இனபெருக்கத்திற்கான கால்நடைகளை விற்பனை செய்தல்.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு உள்ளிருப்பு பயிற்சி மற்றும் செய்முறைப் பயிற்சி அளித்தல்.
பண்ணையாளர்களுக்கு அறிவியல் ரீதியான பண்ணைத் தொழிநுட்பங்களை மாதிரி பண்ணை மூலம் செயல்முறை விளக்கமளித்தல்.
நோக்கங்கள்
கால்நடை உற்பத்தி கல்விக்கான ஆராய்ச்சியில் கால்நடைகளின் உற்பத்தித்; திறனை அறியும் வகையில் பசு மற்றும் எருமையினம், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு, வெண் பன்றி, கோழியினம், முயல் மற்றும் நெருப்புக்கோழிக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைப் பராமரித்தல்.
கோழியினங்களுக்கான (நாட்டுக்கோழி, ஜப்பானியக் காடை மற்றும் நெருப்புக்கோழி) குஞ்சுபொரிப்பகத்தினை பராமரித்தல்.
கால்நடைகளுக்கான பசுந்தீவனங்களை சாகுபடி செய்தல்.
பண்ணையாளர்கள் மற்றும் இதர கால்நடை பராமரிப்பு துறைகளுக்கான இனவிருத்திக் கால்நடைகள் மற்றும் கோழி இனங்களை வழங்குதல்.
நெறிமுறை மற்றும் கட்டுப்பாட்டு விதிக்கு உட்பட்ட கால்நடைகளை ஆராய்ச்சிக்காக வழங்குதல்.
அனைத்து வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள்.
கலையரங்கம்.
இளங்கலை கால்நடை மருத்துவ இருபாலின மாணவர்களுக்கான தனித்தனி விடுதிகள்.
இறைச்சி உற்பத்திக்கான இறைச்சிக் கூடம் மற்றும் இறைச்சிப் பொருட்களை விற்பதற்கான விற்பனை அங்காடி.
கால்நடைகளின் அனைத்து பிரிவுகளிலும் வௌ;வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்தல்.
கால்நடை மற்றும் கோழியினம் பராமரிப்பிற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துதல்.
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,
காட்டுப்பாக்கம் - 603 203, செங்கல்பட்டு மாவட்டம்.
தொலைபேசி எண்: +91-44-27452224
மின்னஞ்சல்: lrs@tanuvas.org.in