vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கால்நடை சிகிச்சை வளாகம்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனியில் கால்நடை சிகிச்சை வளாகமானது 2020-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

மருத்துவமனையின் பணிநேரம்

வேலை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 08.00 முதல் நண்பகல் 1.00 மணி வரை
சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை தினங்களில் காலை 08.00 முதல் 11.30 மணி வரை

குறிக்கோள்கள்

  • கால்நடை மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பயிற்றுவித்தல்.
  • தேனி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்குத் தேவையான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளை அளித்தல்.
  • தேனி மாவட்ட கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை நடமாடும் சேவை மூலம் அளித்தல்.

பிரிவுகள்

வெளிப்புற நோயாளிகள் பிரிவு

கால்நடை சிகிச்சை வளாகத்தின் வெளிப்புற நோயாளிகள் பிரிவானது கால்நடை வளர்க்கும் விவசாய மக்களின் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணி வளர்க்கும் பொதுமக்களின் செல்லப்பிராணிகளுக்குத் தேவையான மருத்துவ, ஈனியல் மற்றும் அறுவை சிகிச்சையியல் பணிகளைத் தந்து வருகின்றது.

நிழற்படவியல் பிரிவு

கால்நடை சிகிச்சை வளாகத்தின் நிழற்படவியல் பிரிவானது, மாடு, ஆடு மற்றும் நாய்களின் சிகிச்சைகளுக்குத் தேவையான மீயொலி நிழல்படவியல் பரிசோதனையின் மூலம் வயிறு மற்றும் குடல் சார்ந்த கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்சனைகள், சினை கண்டறிதல் மற்றும் சினையின்மை போன்ற காரணங்களைக் கண்டறிதல் சேவையினை தந்து வருகின்றது.

அறுவை சிகிச்சைக்கூடவியல் பிரிவு

கால்நடை சிகிச்சை வளாகத்தின் அறுவை சிகிச்சைக்கூடவியல் பிரிவானது, கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்குத் தேவையான அறுவை சிகிச்சையினை முறையான திட்டமிடுதல்படி தந்து வருகின்றது.

மாணவர்களுக்கான பட்டப்படிப்பு பாடத்திட்டங்கள்:

இந்திய கால்நடை மருத்துவ ஆணையத்தின் கால்நடை கல்விக்கான குறைந்தபட்ச தரக்குறியீடு (MSVE) 2016ன் படி, கால்நடை மருத்துவ இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கால்நடை சிகிச்சை முறைகள் -I, கால்நடை சிகிச்சை முறைகள் - II பாடங்கள் கால்நடை சிகிச்சை வளாகத்தின் மூலம் தரப்படுகின்றன.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கல்வி சிறப்புப் பிரிவு
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 534
மின்னஞ்சல்: edu-vcc-vcri-thn@tanuvas.org.in