கால்நடை சிகிச்சையியல் வளாகம் சேலம்-அரகளூரில் உள்ள கால்நடை மருந்தகத்தில் 08.09.2020 முதல் தற்காலிக அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. மாண்புமிகு துணைவேந்தர் அவர்கள், ஜூன் 3, 2022 அன்று சேலம், தலைவாசல் கூட்டுச் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கால்நடை சிகிச்சையியல் வளாகத்தில் நிரந்தர கட்டிடத்தில் மருத்துவ நடவடிக்கைகளைத் தொடங்கினார்.
இக் கால்நடை மருத்துவ வளாகம் இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை மருத்துவ வளாகங்களில் ஒன்றாகும். இது மொத்தம் 48861.16 சதுர அடி பரப்பில் நிறுவப்பட்டுள்ளது (தரைத் தளம் 27394.96 சதுர அடி , முதல் தளம் 21466.20 சதுர அடி). இது சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய பிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதோடு மட்டுமன்றி மாணவர்களுக்கு கால்நடை மருத்துவ பாடங்களில் பயிற்சி அளிக்கிறது. இந்த வளாகத்தில் எண்டோஸ்கோப்பி போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன, பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங், எக்கோகார்டியோகிராபி, கணினிமயமாக்கப்பட்ட கதிரியக்கவியல், இரத்தப்பரிசோதனை பிரிவு, சிறு விலங்குகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேக தோல் சிகிச்சை பிரிவு, சிறிய மற்றும் பெரிய பிராணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஆபரேஷன் தியேட்டர், பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கு மட்டும் உள்ளிழுக்கக்கூடிய மயக்கமருந்துக் கருவி மற்றும் கால்நடை நோய் கண்டறியும் ஆய்வகம் ஆகியன உள்ளன.
பெயர் மற்றும் பதவி | மின்னஞ்சல் | கைபேசி# |
---|---|---|
முனைவர் கே. பொன்னுசாமி, பேராசிரியர் மற்றும் தலைவர் |
ponnuswamy.kk@tanuvas.ac.in | +91-9443293342 |
முனைவர் இ.வெங்கடேசகுமார், இணைப் பேராசிரியர் |
venkatesakumar.e@tanuvas.ac.in drvenkat75@gmail.com |
+91-9443557357 |
டாக்டர் ஆர். ராஜ்குமார், உதவிப் பேராசிரியர் |
r.rajkumar@tanuvas.ac.in drrajkumargr@gmail.com |
+91-9786557120 |
டாக்டர் ஏ.சுந்தர், உதவிப் பேராசிரியர் |
sundar.a@tanuvas.ac.in | +91-8489135699 |
டாக்டர் எம்.வெங்கடேசன், உதவிப் பேராசிரியர் |
venkatesan.m@tanuvas.ac.in drvenksmvsc88@gmail.com |
+91-9003275343 |
டாக்டர் ஏ.விஜய், உதவிப் பேராசிரியர் |
vijay.a@tanuvas.ac.in drvijaybvsc@gmail.com |
+91- 8760659841 |
டாக்டர் யு. நசீமா, உதவிப் பேராசிரியர் |
naseema.u@tanuvas.ac.in vetnaseema@gmail.com |
+91-9047948152 |
டாக்டர் எஸ்.ஹம்சா யாமினி, உதவிப் பேராசிரியர் |
hamsayamini.s@tanuvas.ac.in | +91-9884229812 |
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ வளாகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டுச் சாலை, நத்தக்கரை சுங்கச்சாவடி அருகில்,
சேலம் - 636 112, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-4282-290998
மின்னஞ்சல்: vcc-vcri-slm@tanuvas.org.in