VCRI, Udumalpet

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை

கால்நடை சிகிச்சை வளாகம்


உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை வளாகம் 27.10.2020 நிறுவப்பட்டது. இந்த சிகிச்சை வளாகம் பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கு தேவையான நோய்க்கண்டறிதல் சேவையயும் அதற்குண்டான மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குகிறது. மேலும் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கான பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகிறது. இந்த கால்நடை சிகிச்சை வளாகத்தில் பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கான மருத்துவம், அறுவை சிகிச்சை, ஈனியல், செயற்கை கருவூட்டல் மற்றும் கால்நடை நோய் கண்டறிதல் போன்ற சிறப்பு பிரிவுகள் உள்ளன. இந்த சிகிச்சை வளாகம் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதையும் மற்றும் இளநிலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு திறம்பட கற்பித்தலையும் சிறப்பாக செய்துவருகிறது.

மருத்துவமனை வேலை நேரம்

திங்கள்-வெள்ளி: காலை 08.00 - மதியம் 01.00

சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில்: காலை 08.00 - 11.30 A.M.

குறிக்கோள்கள்

  • நோயுற்ற பிராணிகளின் நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை செய்தல்
  • இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்தல்
  • வெளியிலிருந்து சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு நிபுணர் கருத்து மற்றும் சிகிச்சையை வழங்குதல்
  • கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு மேம்பட்ட நோயறிதல் வசதிகளை வழங்குதல்

கல்வி

கால்நடை மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரநிலைகள் - 2016 நிர்ணயித்த விதிமுறைகளின்படி இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் மூலம், இளங்கலை பட்டதாரிகளுக்கு பின்வரும் பாட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன

  • கால்நடை மருத்துவ சிகிச்சைப் பயிற்சி: VCP 411 (0+5)
  • கால்நடை மருத்துவ சிகிச்சைப் பயிற்சி:VCP 421 (0+5)
  • கால்நடை மருத்துவ சிகிச்சைப் பயிற்சி: VCP 511 (0+5)

மருத்துவ சேவைகள்

  • ஒவ்வொரு நாளும் இந்த கால்நடை மருத்துவ சிகிச்சை வளாகத்தில் சராசரியாக 30-35 கால்நடைகள் மற்றும் சிறிய பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • கால்நடை மருத்துவ வளாகம் அல்ட்ரா சவுண்ட் மற்றும் பிற நோயறிதல் கருவிகளுடன் கூடிய சிறப்புப் பிரிவைக் கொண்டுள்ளது.
  • செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி சேவைகள்.
  • கால்நடைகளுக்கு சிறப்பு அறுவை சிகிச்சைகள் தினசரி அடிப்படையில் செய்யப்படுகின்றன.

கால்நடை நோயறிதல் ஆய்வகம் (VDL)

கால்நடை நோயறிதல் ஆய்வகம் (VDL), உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கால்நடை சிகிச்சை வளாகத்தின் ஒரு பிரிவு ஆகும். இந்த ஆய்வகம் நவீன உபகரணங்கள், உயர் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பாட நிபுணர்களைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வகம் கால்நடை சிகிச்சை வளாகத்திற்கு வரும் கால்நடைகளுக்கான நோய் கண்டறியும் பணிகளையும், இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு நோய் கண்டறிதலின் அடிப்படை பயிற்சியையும் வழங்குகிறது.
இந்த ஆய்வகம் ஆனது முழுமையான தானியங்கி இரத்த பகுப்பாய்வி, முழுமையான உயிர்வேதியியல் பகுப்பாய்வி, எலக்ட்ரோலைட் பகுப்பாய்வி மற்றும் சிறுநீர் பகுப்பாய்வி ஆகிய உபகரணங்களையும் மற்றும் அதிநவீன நுண்ணோக்கியையும் கொண்டுள்ளது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை சிகிச்சை வளாகம்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை - 642 126.
தொலைபேசி: +91-4252-295399 | 295499
மின்னஞ்சல்: vcc-vcri-udp@tanuvas.org.in