கால்நடை நலக்கல்வி மையம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

பல்கலைக்கழக மைய ஆய்வகம்


தோற்றமும் வளர்ச்சியும்

  • பல்கலைக்கழக மைய ஆய்வகம் கால்நடை மற்றும் கோழிகளில் ஏற்படும் அனைத்து வகை நோய்களையும் கண்டறிய 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோய் உறுதிசெய்யப் பகுப்பாய்விற்காக இந்த ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குறிக்கோள்கள்

  • கால்நடைகளில் ஏற்படும் நோய்களைக் கண்டறியும் இந்த ஆய்வகம், தமிழ்நாடு முழுவதும் சேவை ஆற்றுகிறது.
  • கால்நடைகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய அடிப்படை மற்றும் செயல்முறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
  • புதிய உத்திகளைக் கொண்டு கால்நடைகளின் நலன்கள் மற்றும் உற்பத்தித் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது.

ஆய்வகத்தின் சேவைகள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகளைப் பாதிக்கும் நோய்களைக் கண்டறிதல்
  • கால்நடைப் பராமரிப்புத் துறையுடன் இணைந்து செயலாற்றி மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் நலன்களைக் கண்காணித்தல்
  • கால்நடைகளில் நோயைக் கண்டறிய உதவும் வினைப்பொருட்கள் மற்றும் உயிரிப் பொருட்கள் ஆகியவற்றை, தேவையான நேரங்களில் தயாரித்து, கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு வழங்குதல்
  • பல்கலைக்கழகப் பண்ணைகளில் உள்ள கால்நடைகளில் நோய் ஆய்வு செய்து, தக்க ஆலோசனைகளை வழங்குதல்
  • ஏற்றுமதியாளர்களுக்கு அடைப்பான் நோய்க்கான நலச் சான்றிதழ் வழங்குதல்
  • பண்ணையாளர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி, கால்நடைகள் மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துதல்
  • கால்நடைகளில் நோய் கண்டறிதல் பற்றிய குறுகிய காலப் பயிற்சிகளை அளித்தல்

ஆய்வகத்தில் வழங்கப்படும் சேவைக்கான கட்டண விவரம்

1. நச்சுயிரியியல்

வ.எண் பரிசோதனையின் பெயர் கட்டண விவரம் (ஒரு மாதிரிக்கு / ரூபாயில்) + 18% ஜிஎஸ்டி
1 பல்படியாக்கத் தொடர் வினைச் சங்கிலி (பிசிஆர்) -வினைப்பொருள் உயிரிப் பொருட்கள் (டிஎன்ஏ) நச்சுயிரி 750
2 ஆர்டி- பிசிஆர் 1000
3 சைபர் பச்சை அடிப்படையிலான அளவீட்டு பிசிஆர் 1000
4 சைபர் பச்சை அடிப்படையிலான அளவீட்டு ஆர்டி - பிசிஆர் 1500
5 ஆட்டம்மைக்கான நலச் சான்றிதழ் 1500
6 இரத்த அணுத் திரட்டல் சோதனை மற்றும் இரத்த அணுத் திரட்டல் தடுப்புச் சோதனை 20
7 முட்டையைப் பயன்படுத்தி நச்சுயிரியைப் பிரித்தெடுத்தல் (மூன்று முறை) 2000
8 திசு வளர்ப்பு மூலமாக நச்சுயிரியைத் பிரித்தெடுத்தல் (மூன்று முறை) 5000
9 மின்னாற்பகுப்பு எதிர்மாறான எதிர் காரணி பல்படியாக்கத் தொடர்வினை 50
10 மிளிர் ஒளி மிளிர்வு எதிர் காரணித் தொழில்நுட்பம் 1000
11 கேனைன் வைரஸ் நோய்க்கிருமிகளை கண்டறிவதற்கான பலகரம் பிசிஆர் (பலகம் 1)
1. கேனைன் பர்வோ வைரஸ்
2. கேனைன் சிர்கோ வைரஸ்
3. கேனைன் ஏடினோ வைரஸ்
500
12 கேனைன் வைரஸ் நோய்க்கிருமிகளை கண்டறிவதற்கான பலகரம் பிசிஆர் (பலகம் 2)
1. கேனைன் டிஸ்டம்பர் வைரஸ்
2. கேனைன் என்டேரோஜெனிக் கொரோனா வைரஸ்
500

2. ஒட்டுண்ணியியல்

வ.எண் பரிசோதனையின் பெயர் கட்டண விவரம் (ஒரு மாதிரிக்கு / ரூபாயில்) + 18% ஜிஎஸ்டி
1 இரத்தப் பரவல் பூச்சுவில் ஒட்டுண்ணிகளைக் கண்டறிதல் 50
2 சாணத்தில் ஒட்டுண்ணிகளைக் கண்டறிதல் 50
3 மூக்கு சளி மாதிரிச் சோதனை 50
4 தோல் உரசித் தேய்வு மாதிரி 50
5 புழு மற்றும் இதர ஒட்டுண்ணிகளைக் கண்டறிதல் 100
6 சாண மாதிரியில் ஒட்டுண்ணி அளவீட்டுச் சோதனை 100
7 பிசிஆர் மூலம் ஒட்டுண்ணிகளைக் கண்டறிதல் 500

3. நுண்ணுயிரியல்

வ.எண் பரிசோதனையின் பெயர் கட்டண விவரம் (ஒரு மாதிரிக்கு / ரூபாயில்) + 18% ஜிஎஸ்டி
1 மரபு முறையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் பிரித்தெடுத்துக் கண்டறிதல் ரூ.500 / மாதிரி
2 பிசிஆர் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் பிரித்தெடுத்துக் கண்டறிதல் ரூ.750 / மாதிரி
3 திசுக்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை மூலக்கூறு ஆய்வு மூலம் கண்டறிதல் ரூ.750 / மாதிரி
4 தீவன மற்றும் சுற்றுப்புற மாதிரிகளில் மொத்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ரூ.500 / மாதிரி
5 நீர் மாதிரிகளில் மொத்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ரூ.250 / மாதிரி
6 நீர் மாதிரிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ரூ.250 / மாதிரி
7 தீவன மற்றும் சுற்றுப்புற மாதிரிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ரூ.500 / மாதிரி
8 நுண்ணுயிரி எதிர்ப்புத் தன்மையைச் சோதித்தல் ரூ.500 / மாதிரி
9 காசநோய்க்கு டியுபர்குளின் பரிசோதனை பல்கலைக்கழக மற்றும் அரசுப் பண்ணையில் உள்ள ஆடுகளுக்குத் தலா ரூ. 50. அரசு, பல்கலைக்கழகப் பண்ணையில் உள்ள மாடுகள் மற்றும் தனியார் ஆடு, மாட்டுப் பண்ணைக்குத் தலா ரூ. 100.
10 ஜோனின் பரிசோதனை
11 கோழிகளைப் பயன்படுத்தி உயிரியல் பரிசோதனை ரூ.600 / மாதிரி
12 கினியா பன்றி /முயல்களைப் பயன்படுத்தி உயிரியல் பரிசோதனை ரூ.1000 / மாதிரி
13 எலி மற்றும் சுண்டெலிகளைப் பயன்படுத்தி உயிரியல் பரிசோதனை ரூ.400 / மாதிரி
14 பி.எஸ்.எல்-3 ஆய்வகத்தைப் பயன்படுத்தாமல் பி.சி.ஆர் மூலம் அடைப்பான் நோய்க்கான நலச் சான்றிதழ் வழங்குதல் (ஏற்றுமதி/இறக்குமதி) ரூ.1500 / மாதிரி
15 பி.எஸ்.எல்-3 ஆய்வகத்தில் எலிகளை பயன்படுத்தி அடைப்பான் நோய்க்கான நலச் சான்றிதழ் வழங்குதல் (ஏற்றுமதி/இறக்குமதி) ரூ.3000 / மாதிரி
16 தன்வழிப் பெருக்கத் தடுப்பூசி நுண்ணுயிரியைப் பிரித்தெடுக்க ரூ.1000 / மாதிரி. ஒரு தடுப்பூசி மருந்தளவு ரூ. 5.
17 பரவல் பூச்சுவில் நுண்ணோக்கி மூலம் பாக்டீரியாவைக் கண்டறிதல் ரூ.50 / மாதிரி
18 அணுத்திரட்டல் சோதனை ரூ.50 / மாதிரி
19 நுண்ணுயிரி நோய்க்கிருமிகளைக் கண்டறிவதற்க்கான பலகரம் பிசிஆர் (பலகம் 2)
1. சால்மொனெல்லா
2. ஈ.கோலி
3. கேம்பிலோபாக்டர்
4. கிளோஸ்ட்ரிடியும்
ரூ.500 / மாதிரி

4. நோய்க்குறியியல்

வ.எண் பரிசோதனையின் பெயர் கட்டண விவரம் (ஒரு மாதிரிக்கு / ரூபாயில்) + 18% ஜிஎஸ்டி
பெரிய / வணிகப் பண்ணை சிறு / குறு பண்ணை
1. கோழிகளுக்கான இறப்பறி பரிசோதனை ரூ.250 / கோழி ரூ.75 / கோழி
2. ஈமு /நெருப்புக் கோழிகளுக்கான இறப்பறி பரிசோதனை ரூ.500 / கோழி ரூ.500 / கோழி
3. செல்லப் பறவைகளுக்கான இறப்பறி பரிசோதனை ரூ.250 / கோழி ரூ.100 / கோழி
4. நாய், பூனை, பன்றி, ஆடு, கன்று போன்ற சிறிய வகை விலங்குகளுக்கான இறப்பறி பரிசோதனை ரூ.300 / விலங்கு ரூ.200 / விலங்கு
5. பந்தயக் குதிரைகள், மாடு போன்ற பெரிய வகை விலங்குகளுக்கான இறப்பறி பரிசோதனை ரூ.2000 / விலங்கு ரூ.1000 / விலங்கு
6. ஆய்வக விலங்குகளுக்கான இறப்பறி பரிசோதனை (முயல், எலி, சுண்டெலி, கினியா பன்றி போன்றவை) ரூ.100 / விலங்கு ரூ.50 / விலங்கு
7. திசு நோய்க்குறியியல் ரூ.250 / திசு ரூ.200/திசு
8 வெளியிலிருந்து பெறப்பட்ட படவில்லை மாதிரிகளில் திசு நோய்க்குறியியல் விளக்கம் மட்டும் ரூ.100 / படவில்லை
9 கணினித் தொழில்நுட்ப முறையில் நுண்படம் எடுத்தல் ரூ.50 / படம்
10. இரத்தப் பரிசோதனை (மொத்த இரத்த அணுக்கள் எண்ணிக்கை சோதனை மட்டும்) ரூ.200 / மாதிரி ரூ.75 / மாதிரி
11. ஊநீரில் உயிர் வேதியியல் பரிசோதனை ரூ.100 / மாதிரி ரூ.50 / மாதிரி
12. சிறுநீர் மாதிரிப் பகுப்பாய்வு ரூ.100 / மாதிரி ரூ.50 / மாதிரி

நோய்ப் புலனாய்வு

வ. எண் பரிசோதனையின் பெயர் கட்டண விவரம் (ஒரு மாதிரிக்கு / ரூபாயில்) + 18% ஜிஎஸ்டி
1 வெளியூர் கோழிப் பண்ணைகளில் நோய்ப் புலனாய்வு (நூற்றுக்கும் குறைவான கோழிகள் உள்ள பண்ணைகள்) ரூ.500
2 வெளியூர் கோழிப் பண்ணைகளில் நோய்ப் புலனாய்வு (1000-10000 வரை கோழிகள் உள்ள பண்ணைகள்) ரூ.2000
3 வெளியூர் கால்நடை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைகள் ரூ.2000
4 வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் – குஞ்சுப் பொரிப்பகங்கள், பந்தயக் குதிரைகள், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளைக் கொண்ட பண்ணைகள் ரூ.4000

நோய் மாதிரிகளுடன் அனுப்பப்பட வேண்டிய தகவல்கள்

  • பண்ணை /பண்ணையாளரின் பெயர் மற்றும் முகவரி
  • பண்ணையின் வகை
  • மாதிரிகளின் தன்மை
  • செய்யப்பட வேண்டிய சோதனை
  • கட்டண விவரம் (பணம்/காசோலை)
  • பிற விவரங்கள்

வல்லுநர்களின் விவரங்கள்

  • முனைவர் கோ பாலகிருஷ்ணன், பேராசிாியர் மற்றும் தலைவர், gobalg@rediffmail.com
  • முனைவர் சீ. ஜெய்ஸ்ரீ, உதவிப் பேராசிாியர், drjai81@yahoo.com
  • முனைவர் கோ. கலைச்செல்வி, உதவிப் பேராசிாியர், kalaiselvigovindan1981@gmail.com
  • முனைவர் இரா. ரம்யா, உதவிப் பேராசிாியர், ramyavet@gmail.com
  • மருத்துவர். ரா. சாஹித்யா, உதவிப் பேராசிாியர் saahithya.r@gmail.com

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பல்கலைக்கழக மைய ஆய்வகம்,
கால்நடை நலக் கல்வி மைய இயக்ககம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை - 600051.
தொலைபேசி: +91-44-25551581
மின்னஞ்சல்: culcahs@tanuvas.org.in