தோற்றமும் வளர்ச்சியும்

1903 ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் தற்காலிக அமைப்பில் ஐந்து மாணவர்களுடன் குதிரை சிகிச்சைப் பள்ளியாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. உழவியலுக்கான ராயல் கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் கால்நடை மருத்துவத்தில் பட்டம் வழங்க கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இக்கல்லூரி இந்தியாவில் தொடங்கப்பட்ட நான்காவது கால்நடை மருத்துவ நிறுவனமாக இருந்தாலும், 1935- ல் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட நாட்டின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரியாகும். சென்னை சென்ட்ரல் அருகே வேப்பேரியில் 6 ஹெக்டேர் பரப்பளவில் கல்லூரி அமைந்துள்ளது. இதன் நிர்வாக கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட ஒரு பாரம்பரிய அமைப்பாகும், இக்கல்லூரியில் 31 துறைகள் இளங்கலை கால்நடை மருத்துவம் கற்பத்தலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 22 துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.



  • 2001 ஆம் ஆண்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் சான்றிதழ் இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது
  • விலங்கு உற்பத்தி மற்றும் நல வாரியத்தின் உறுப்பு நாடுகளின் பயிற்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • கால்நடை உயிரி தொழில்நுட்பத் துறையானது நோய் கண்டறிதலுக்கான சிறந்த மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள்

ஒரு கல்லூரியானது அதிநவீன உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், தகுதியான, அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வி சாத்தியமாகும். நாட்டிலுள்ள மற்ற கால்நடை மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடும் போது, ​​சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அவர்களில் பலர் தேசிய மற்றும் வெளிநாட்டு ஆய்வகங்களில் பயிற்சி பெற்றவர்கள்.


மேலும் தகவல், தொடர்பு:

முனைவர் இரா. கருணாகரன்
முதல்வர், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
சென்னை - 600 007, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-44-25304000; தொலைநகல்: +91-44-25362787
மின்னஞ்சல்: deanmvc@tanuvas.org.in

ஆசிரியர்கள் எண்ணிக்கை

  • பேராசிரியர்கள் - 42
  • இணைப் பேராசிரியர்கள் - 4
  • உதவிப் பேராசிரியர்கள் - 41