பத்து நவீன விரிவுரை அரங்குகள் மற்றும் ஒலி-ஒளி வசதிகளுடன் கூடிய இரண்டு கருத்தரங்குகள் கொண்ட ஒரு கட்டிட வளாகம் உள்ளது.விரிவுரை அரங்குகள் கால்நடை பராமரிப்புத் தொகுதியிலும், நவீன கருத்தரங்குகளிலும் உள்ளன.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு சர்வர் நிலையம், ஐந்து சேவையகங்களுடன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத் தலைமையகங்களின் இணையம் மற்றும் அக இணைய சேவைகளை வழங்குகிறது. ஒரு பிரத்யேக 1GB இணைய இணைப்பு உள்ளது. 40 மாணவர்கள் ஒரே சமயத்தில் பயில இன்டர்நெட் வசதிகளுடன் கூடிய கணினி மையம் உள்ளது. ஏழு பணிநிலையங்கள், இரண்டு வீடியோ பணிநிலையங்கள், லேபிள் அச்சுப்பொறியுடன் ஒரு குறுவட்டு / டிவிடி டூப்ளிகேட்டர் கொண்ட ஒரு மின்-கற்றல் ஆய்வகம், மின் - கற்றல் தொகுதிகள் உருவாக்குவோர் தேவைகளை பூர்த்தி செய்கிறது. சமீபத்தில், ஆன்லைன் நெட் / ஏஆர்எஸ் தேர்வுக்கான வசதியும் நிறுவப்பட்டுள்ளது.
மாணவர்களின் விடுதி கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது இது 750 மாணவர்கள் தங்கும் திறன் கொண்ட ஒன்பது கட்டடங்களைக் கொண்டுள்ளது. இது மாணவர் மற்றும் மனவியருக்கென தனித்தனி விடுதிகள் மற்றும் உணவகங்களைக் கொண்டுள்ளது. மாணவர்களுக்கான சமையலறை, வாசிப்பு அறை, உள்விளையாட்டு அரங்கம், சோலார் வாட்டர் ஹீட்டர் மற்றும் ஆர்.ஓ.வாட்டர் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
சுமார் 40,000 புத்தகங்கள், 500 மின் புத்தகங்கள், 100 வெளிநாட்டு இதழ்கள், 65 தேசிய சஞ்சிகைகள், 25,000 பின் தொகுதிகள் என ஏராளமான தகவல் வள ஆதாரங்களைக் கொண்டுள்ள இந்த நூலகம், நாட்டிலேயே மிகப் பெரிய ஒன்றாகும். இது 'வேளாண்மையில் மின் வளங்களுக்கான கூட்டமைப்பு' (CeRA) மூலம் சுமார் 2,800 ஆன்லைன் இதழ்களை அணுகுகிறது. சென்னை நகரில் உள்ள சுமார் 20 முக்கிய நூலகங்களின் வளங்களை பயனர்கள் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
பல்வேறு விலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனையில் சிறந்த நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. வெளிநோயாளர் பிரிவுகளைத் தவிர, 24 மணி நேர விபத்து மற்றும் உள்நோயாளி பிரிவுகள் உள்ளன, இதில் எண்டோஸ்கோப், ஆப்தால்மோஸ்கோப், ஆர்த்ரோஸ்கோப், டயாலிசர், எலக்ட்ரோ கார்டியோ கிரா போன்ற மேம்பட்ட உபகரணங்கள் உள்ளன.