mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

மைய சிகிச்சையியல் ஆய்வகம்


தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தின் சிகிச்சையியல் இயக்குநரகத்தின் கீழ் 1971 ஆம் ஆண்டு சிகிச்சையியல் நோய் கண்டறியும் ஆய்வகமாக துவக்கப்பட்டு 01.04.1993 முதல் மைய சிகிச்சையியல் ஆய்வகமாக செயல்பட்டு வருகிறது

குறிக்கோள்

  • சிகிச்சையியலுக்கு தரமான ஆய்வக பரிசோதனை வசதிகளை தருவது மற்றும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வது முக்கிய குறிகோள் ஆகும்.
  • இந்த சேவையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, பல்கலைக் கழக புறநகர் கால்நடை மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழகத்தில் பயின்ற மற்ற கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்கி வருகிறது.
  • பல்கலைக் கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும், பல்வேறு புறநிதியுதவி பெறும் திட்டங்களின் கீழ் நடைபெறும் ஆராய்ச்சி பணிகளுக்கும் தேவையான ஆய்வக பரிசோதனை சேவைகளை வழங்குதல்.
  • சிகிச்சை நுண்ணுயிரியல் மற்றும் சிகிச்சை நோய்குறியியலில் சிறந்த நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஆய்வக பரிசோதனைகள், தனித்துவமான உபகரணங்களை கொண்டு நிலையான இயக்க முறை வழிகாட்டுதல் முறைப்படி சிகிச்சை நுண்ணுயிரியல் மற்றும் சிகிச்சை நோய்குறியியல் சார்ந்த வல்லுநர்களின் மேற்பார்வையில் செய்யப்பட்டு முடிவுகளை துரிதமாக வழங்குதல்.

வேலை நேரம்

  • இந்த ஆய்வகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 முதல் மாலை 5.00 மணி வரையும் மற்ற விடுமுறை நாட்களில் காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை இயங்குகிறது.

கல்வி

  • இந்த ஆய்வகம் முதுநிலை மாணவர்களுக்கு ஆராய்ச்சி பணிகளுக்கு சேவை புரிவதோடு சிட்டகாங்க் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, பங்களாதேசம் மற்றும் மிக்சிகன் மாநில பல்கலைக் கழகம், அமெரிக்காவின் உள்ளிருப்பு மாணவர்களுக்கு நவீன ஆய்வக பரிசோதனை பயிற்சிகளை பயிற்றுவித்து அதன் வழி கால்நடைகளின் உடல்நலனை அறிய செய்வது.
  • உட்சுரப்பியல் மற்றும் ஊநீரியல் பகுப்பாய்வு பரிசோதனைகளையும் மேற்கொள்ள செயல்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
  • ஆய்வகத்தில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களுக்கும், கால்நடை மருத்துவ பயிற்சியாளர்களுக்கும் ஆய்வக பரிசோதனை குறித்த கைப்பயிற்சி நடத்த திட்டமிடபட்டுள்ளது
  • கால்நடை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பர்களுக்கான சான்றிதழ் படிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • 2013-2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை-நோய்குறியியல் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் பெற விரும்பும் கால்நடை மருத்துவர்களுக்காக இணையத்தின் வழி முதுநிலை டிப்ளமோ பட்ட படிப்பு இயங்கி வருகிறது

சேவைகள்

  • சிகிச்சை-இரத்தவியல் (இரத்தம் மற்றும் அதன் அதன் பகுதிப் பொருட்களை ஆய்வு செய்தல்)
  • உயிரணுவியல் (உடலில் உள்ள செல்கள் மற்றும் உடல் திரவப் பொருட்களான வெளியேறும் திரவம், சீழ், மற்ற கழிவு பொருட்களை ஆய்வு செய்தல்)
  • சிகிச்சை-உயிர்வேதிப்பொருள் பகுப்பாய்வு (ஊநீரில் வேதிப்பொருட்களை ஆய்வு செய்தல்)
  • சிகிச்சை-சாண பரிசோதனை
  • சிகிச்சை-தோல் மருத்துவம் (தோல் சுரண்டிகளை ஆய்வு செய்தல்)
  • சிகிச்சை-சிறுநீரகவியல் (சிறுநீர் பகுப்பாய்வு)
  • சிகிச்சை-நுண்ணுயிரியல் (நுண்ணுயிரி வளர்ப்பு, நுண்ணுயிரி மற்றும் பூஞ்சை தனித்து பிரித்தெடுத்து கண்டறிதல், நுண்ணுயிரிகளை கொல்லும் எதிருயிரிகளை கண்டறியும் ஆய்வு)
  • தனியார் கால்நடை மருத்துவர்கள் பணம் செலுத்தி இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து கொள்ளும் வசதி உள்ளது.

வல்லுநர்கள்

  • சு.வைரமுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர்,
  • எஸ். சுபபிரியா, உதவி பேராசிரியர்,
  • என்.ஆர்.செந்தில், உதவி பேராசிரியர்,

தொடர்புக்கு:

மைய சிகிச்சையியல் ஆய்வகம்,

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,

சென்னை - 7