DCAPS

கால்நடை உற்பத்திக் கல்வி மையம்

காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்,சத்தியமங்கலம்



காங்கேயம் மாட்டினம் மிகச் சிறந்தவேலைத்திறன் கொண்டவையாகும். இவை கடினமான தட்பவெப்பநிலை, நோய் எதிர்ப்புத்திறன், தாவரக் கழிவுகள்மற்றும் தரம் குறைந்த தீவனங்களைதிறம்படமாற்றுதல்மற்றும் வறட்சிஆகியவற்றைத் தாக்குபிடிக்கும் திறன் கொண்டவையாகும். தற்போது விவசாயம் இயந்திரமாயமானதால் உழவுமாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. ஆகவேகாங்கேயம் மாடுகளின் எண்ணிக்கைகுறையாமல் பாதுகாக்கவும், அழிவிலிருந்துமீட்கவும் புறத்தோற்றம் மற்றும் பண்பியல்புகள் பற்றி ஆய்வுகள்மேற்கொண்டுவிவசாயிகளின் வாழ்வாதாரத்தைமேம்படுத்தவேண்டும் என்றநோக்கத்தில்ஈரோடுமாவட்டத்தில் ‘காங்கேயம் மாட்டின ஆராய்ச்சிநிலையம்’ நிறுவப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசியவேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் நிதிஉதவியுடன் ரூ.250 இலட்சம் மதிப்பேட்டில் ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பகுதத்தம்பாளையம் கிராமத்தில்காங்கேயம் மாட்டினஆராய்ச்சிநிலையம் அமைக்க 17.09.2017 அன்றுதமிழகஅரசால்அரசாணையும், 18.09.2017 அன்றுபல்கலைக்கழகஆணையும் வழங்கப்பட்டது. ஈரோடுமாவட்டஆட்சித்தலைவர் அவர்களால் நிலையத்திற்காக பகுத்தம்பாளையம் மற்றும் இக்கரைதத்தப்பள்ளி கிராமங்களில் 164 ஏக்கர் மேய்ச்சல் நிலம் 10.05.2018-ல் வழங்கப்பட்டது. இவ்வாராய்ச்சி நிலையத்தில் தற்போது 39 காங்கேயம் இன கிடாரிகள், 10 காளைகள் மற்றும் 25 காங்கேயம் கன்றுகள்பராமரிக்கப்பட்டுவருகின்றன.மேலும் சிறுநீர் (கோமியம்) மற்றும் எரு போன்றவை இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

குறிக்கோள்கள்

  • தூய காங்கேயம் மாட்டின பண்ணையை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.
  • காங்கேயம் மாட்டினத்தைபாதுகாத்தல்.
  • தரமான காங்கேயம் மாட்டினக் கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல்.
  • காங்கேயம் மாட்டினத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வழிவகை செய்தல்.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்,
உப்புப்பள்ளம், பகுத்தம்பாளையம்,
சத்தியமங்கலம் - 638 451, ஈரோடுமாவட்டம்.
மின்னஞ்சல்: kcrs@tanuvas.org.in