vcri, ORATHANADU

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

தோற்றம்

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கால்நடைச் செல்வங்களின் மூலம் மேம்படுத்தும் நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 09.11.2011 அன்று நிறுவப்பட்டது. இக்கல்லூரி தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 25 கி.மீ தொலைவில் ஒரத்தநாடு என்ற இடத்தில் 206.96 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பு தொடங்குவதற்கு ஏதுவாக 2011 - 2012 ஆம் ஆண்டு ஏழு துறைகளுடனும் 40 மாணவர்களுடனும் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய கால்நடை மருத்துவ கழக ஒப்புதலுடன் 2015-16 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை 60 ஆகவும், 2017-18 ல் 80 ஆகவும், 2021-22 முதல் 100 ஆகவும் உயர்த்தப்பட்டது.

உள்கட்டமைப்பு வசதி

இக்கல்லூரியில் 17 துறைகள், 4 வகுப்பறைகள், முதல்வர் அலுவலகம், நூலகம், தேர்வுக்கூடம், கருத்தரங்க கூடம் மற்றும் மாநாட்டுக் கூடம் ஆகியவை அமையப்பட்டுள்ளன. அத்துடன் கற்பிக்கும் கால்நடைப் பண்ணை வளாகம், கற்பிக்கும் கால்நடை சிகிச்சை வளாகம், கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில் நுட்ப வளாகம், மாணவ, மாணவியர்கள் தங்கும் விடுதி, கலையரங்கம், முதல்வர் இல்லம் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த மற்றும் சாரா பணியாளார்களுக்கான தங்குமிடங்கள், விளையாட்டு திடல், கால்நடை பண்ணைகள், தீவன உற்பத்தி ஆலை போன்ற வசதிகளோடு அமையப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் எண்ணிக்கை

  • பேராசிரியர்கள் -
  • இணைப் பேராசிரியர்கள் -
  • உதவிப் பேராசிரியர்கள் -

மேலும் தகவலுக்கு:

முனைவர் . என். நர்மதா
முதல்வர்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஒரத்தநாடு, தஞ்சாவூர்-614 625,
தொலைபேசி: +91-4372-234011/ 12/ 13
மின்னஞ்சல்: deanvcriond@tanuvas.org.in