இக்கல்லூரியில் ஆண்டுக்கு 80 மாணவர்கள் சேர்க்கையுடன் பி.வி.எஸ்சி. & ஏ.எச். இளநிலைக் கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்திய கால்நடை கவுன்சில் ஒழுங்குமுறைகள் இளநிலைக் கல்விக்கு பின்பற்றப்படுகின்றன. எம்.வி.எஸ்சி. பட்டப்படிப்பு 2019-20 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு முதல் மரபு சார் கால்நடை மருத்துவ நடைமுறையில் முதுகலை பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது. பாராட்டத்தக்க தகுதி மற்றும் நிபுணத்துவம் கொண்ட அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
கற்பித்தல் மற்றும் கற்றலை மேலும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு, பல்லூடக ஒளி, ஒலி மற்றும் பிரத்யேக இணைய வசதிகள் கொண்ட 5 விரிவுரை அரங்கங்கள் உள்ளன. மேலும், அமைதியான சூழலின் கீழ் தேர்வுகளை நடத்திட ஒரு தேர்வு கூடமும் உள்ளது.
154 இருக்கைகளுடன் 8037.30 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் 3438 புத்தகங்கள் (தொழில்முறை, பொது மற்றும் போட்டித் தேர்வு புத்தகங்கள்) உள்ளன. மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் அறிவை வளப்படுத்துவதற்காக 19 இதழ்கள் (பருவ இதழ்கள்), 434 பின் இதழ்கள், 19 இதழ்கள் மற்றும் 8 தினசரி செய்தித்தாள்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவற்றிக்குச் சந்தா செலுத்தப்படுகின்றன.
மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி இணைய சேவைகளை வழங்குவதற்காக கணினி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் அனைத்து துறைகளையும் இணைக்கும் வகையில் உள்-கணினி வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணினி பயிற்சியம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மாணவர் அனுமதிக்கப்பட்ட ஆண்டு | தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை | வேலை வாய்ப்பு விவரங்கள் | உயர் படிப்புகள் | |||
---|---|---|---|---|---|---|
கால்நடை உதவி மருத்துவர் | ஆவினில் கால்நடை ஆலோசகர் | கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி கால்நடை ஆலோசகர் | தனியார் வேலை/ தனியார் பயிற்சி | |||
2012-13 | 36 | 31 | - | - | 02 | 03 |
2013-14 | 39 | 31 | 03 | 01 | 04 | - |
2014-15 | 10 | - | 04 | 02 | 03 | 01 |
2015-16 | 56 | - | - | - | 27 | 29 |