vcri

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

உள்கட்டமைப்பு வசதிகள்


கட்டிட உள்கட்டமைப்பு

  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு மேனாள் கால்நடைப்பண்ணையின் கிழக்கு மற்றும் மேற்கு தோட்டங்களில் பறந்து விரிந்துள்ள கட்டமைப்பாகும். இதில் 4 கல்விக் கட்டடங்கள், இருபது துறைகள், கால்நடை மருத்துவ வளாகம், கால்நடைப் பண்ணை வளாகம், நூலகம், நிர்வாக வளாகம், கருத்தரங்கு அறை, விரிவுரை அறை (5 எண்ணிக்கை) ஆகியன உள்ளன. இவை தவிர, தேர்வுக்கூடங்கள் ( ஒன்று), தனித்தனி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், சிற்றுண்டிச்சாலை, முதல்வர் மற்றும் ஆசிரிய, அலுவலர் குடியிருப்புகள் ஆகியன அமைந்துள்ளன.
  • கால்நடை தீவன பகுப்பாய்வு ஆய்வகம் மற்றும் தர உறுதி ஆய்வகம், தீவன ஆலை மற்றும் தாது உப்புக்கலவை உற்பத்தி அலகு, மைட்ரி செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி மையம், பால் பண்ணை நிலையம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக நோயறிதல் ஆய்வகம் மற்றும் கால்நடை அவசர சிகிச்சை பிரிவு போன்ற கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளும் மாணவர்கள் மற்றும் விவசாய சமுதாயத்தினரின் நலனுக்காக அமைந்துள்ளன.

பிற உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள்

விரிவுரை மற்றும் தேர்வுக் கூடங்கள்

  • கற்பித்தல் மற்றும் கற்றலை மேலும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு, பல்லூடக ஒளி, ஒலி மற்றும் பிரத்யேக இணைய வசதிகள் கொண்ட 5 விரிவுரை அரங்கங்கள் உள்ளன. மேலும், அமைதியான சூழலின் கீழ் தேர்வுகளை நடத்திட ஒரு தேர்வு கூடமும் உள்ளது.

நூலக வசதிகள்

  • 154 இருக்கைகளுடன் 8037.30 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் 3438 புத்தகங்கள் (தொழில்முறை, பொது மற்றும் போட்டித் தேர்வு புத்தகங்கள்) உள்ளன. மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் அறிவை வளப்படுத்துவதற்காக 19 இதழ்கள் (பருவ இதழ்கள்), 434 பின் இதழ்கள், 19 இதழ்கள் மற்றும் 8 தினசரி செய்தித்தாள்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகியவற்றிக்குச் சந்தா செலுத்தப்படுகின்றன.

கணினி மற்றும் இணைய வசதிகள்

  • மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி இணைய சேவைகளை வழங்குவதற்காக கணினி மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் அனைத்து துறைகளையும் இணைக்கும் வகையில் உள்-கணினி வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணினி பயிற்சியம் இலவசமாக அளிக்கப்படுகிறது.