dde

தொலைநிலைக் கல்வி இயக்ககம்


கால்நடை மருத்துவ அறிவியல் புலத்தில் முதன்மையான கல்வி நிறுவனமான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கல்வி கற்போரைச் சென்றடைவதில் பெருமை கொள்கிறது. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தையதாகத் தொலைநிலைக் கல்வி வரலாறு இருந்த போதிலும், 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைநிலைக் கல்விப் படிப்புகள் பிரபலமடைந்து முறைசார் கல்வியாக அங்கீகரிக்கப்பட்டது. ஆயினும், இந்த மாற்றம் 21ஆம் நூற்றாண்டு வரை இந்திய கால்நடை மருத்துவ அறிவியல் புலத்தில் துவக்கப்படவில்லை.

dde

  • மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காட்டிற்கும் கூடுதலானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அவ்வாறு ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கால்நடை வளர்ப்பு பயிற்சியளிப்பது, திறன் வாய்ந்த மனித ஆற்றலை எதிர்கொள்ள மிகவும் தேவையாகிறது. இதற்குச் சிறந்த மாற்றுவழி தொலைநிலைக் கல்வி மட்டுமே ஆகும். மேலும், பெரும்பாலும் கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆகியோர் கால்நடைகள் மூலம் உணவு மற்றும் இறைச்சி தேவையை பூர்த்தி செய்வது, மருத்துவ ஆய்வு, பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல் பிரச்சனை, நோய்த் தடுப்பு, பொருளாதாரச் சவால்கள், சமூக நலன் சார்ந்த பிற தேவைகளை நிறைவு செய்தலில் பங்களித்து வருகின்றனர்.
  • இந்த சவால்களை எதிர்கொள்ளவும், அங்கீகரிக்கவும் தங்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்தவும், கற்ற அறிவு மற்றும் திறனைப் பயன்படுத்தவும், கால மாற்றத்திற்கு ஏற்பத் தகுந்தவற்றைச் செயல் விளக்கம் செய்து காட்ட வேண்டியதும் அவசியம். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை மருத்துவர்கள், கால்நடைப் பண்ணையாளர்கள், செல்லப்பிராணி வளர்போர் மற்றும் கால்நடை மருத்துவம் சார்ந்தோரை எளிதில் சென்றடையும் நோக்கில் 2011இல் தொலைநிலைக் கல்விக்கென்றே தொலைநிலைக் கல்வி இயக்ககத்தை நிறுவியுள்ளது. இந்த இயக்ககத்தின் நிர்வாக ஆளுகையின் கீழ் பல்கலைக்கழகத்தின் மாத இதழ், புத்தகம் மற்றும் செய்திமடல்களை என அச்சு ஊடக சேவைகளை மேற்கொள்ள ஏதுவாகப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பிரிவு ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
  • இந்த இயக்ககம் பண்ணையாளர்களின் நலனுக்காகச் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்கிவருகிறது. பெரும்பான்மையான இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் மாநிலம் மற்றும் நமது நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்யவும் இச்செயல்பாடு தேவையாகிறது. நமது நாடு வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து, அறிவியல் அடிப்படையில் வேளாண்மைச் சாகுபடி, கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு குறித்து அவர்களின் திறன்களை ஊக்கப்படுத்துதல் முக்கியமாகிறது. இந்த நோக்கில், செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் / சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள் முக்கியமாகியிருக்கின்றன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் தொலைநிலைக் கல்விப் படிப்புகளை அளித்து, செயல்படுத்தி வருவதில் முதல் பல்கலைகழகம் ஆகும்.

இயக்குநரகத்தின் கீழ் உள்ள பிரிவுகள்

இயக்குநரகத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த விவரங்கள்


தொலைநிலைக் கல்வி இயக்கக ஆசிரியர்கள்

முனைவர் த. சத்தியமூர்த்தி, தொலைநிலைக் கல்வி இயக்குநர்(email : dde@tanuvas.org.in)
முனைவர் த. செந்தில்குமார், பேராசிரியர்(email: drtskumar@yahoo.com)
முனைவர் ஆர்.கே.கனிமொழி, உதவிப் பேராசிரியர்(email: snoogy2001@gmail.com & kanimozhi.r.k@tanuvas.ac.in)

மேலும் தகவல் பெற:

முனைவர் த. சத்தியமூர்த்தி
தொலைநிலைக் கல்வி இயக்குநர்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
புதிய எண் 485 (பழைய எண் 327), அண்ணா சாலை, நந்தனம், சென்னை-600 035,இந்தியா
தொலைபேசி: +91-44-24320411/2140
மின்னஞ்சல்: dde@tanuvas.org.in