dde

தொலைநிலைக் கல்வி இயக்ககம்

சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்


சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

சுய மற்றும் தனிநபர் வேலை வாய்ப்புகள் மற்றும் வருவாயைப் பெருக்குதல் மூலமும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பயனுள்ள தேவையை உருவாக்குதல் மூலமும் பரந்த அளவில் ஊரக வருமையை குறைப்பதில் முதன்மையான பங்கை வகிக்கிறது, கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் துறை. ஊரக மக்களுக்குப் பலதரப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான வாழ்வாதார உருவாக்கத்திலும், வளர்ச்சியும் முன்னேற்றமும் இணைந்த விரும்பிய திசையில் ஊரகப் பொருளாதாரப் பரிமாற்றச் செயல்பட்டிலும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் துறையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கிவுள்ளது.
இதனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் எழுத, படிக்கத் தெரிதல் முதலான குறைந்த கல்வித் தகுதி முதற்கொண்டு 10ஆம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு 10 சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தப் பயிற்சிகள் கறவை மாடு வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி, உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல், கால்நடைப் பண்ணைக் கழிவு மேலாண்மை, முயல் வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, ஜப்பானியக் காடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. அனைத்துப் பயிற்சிகளும் 15 வேலை நாட்கள் கொண்டவை. அனைத்துப் பயிற்சிகளின் கட்டண அளவு ரூபாய் 3000/- ஆகும். சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளில் சேர்க்கை பெற்றவர்களுக்குப் பண்ணையாளர்கள் நடத்தி வரும் பண்ணைகளில் செயல் முறைப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கென்று அடையாளங் காணப்பட்ட பண்ணைகளில் ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்து அனுபவம் பெறுவதற்காகப் பயிற்சியில் சேர்ந்த நபர்கள் அப்பண்ணைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சேர்க்கை விவரங்கள்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பெற்ற பிறகு, இணைப்பில் இடம்பெற்ற அனைத்துப் பயிற்சிகளிலும் தகுதி வாய்ந்த நபர்கள் ஆண்டு முழுவதும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
  • தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயிற்சி மையங்கள் / பிரிவுகள் மூலமும் தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலமும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.
  • அனைத்துத் தகுதி வாய்ந்த / தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்குப் பயிற்சி தொடங்கும் நாள் மற்றும் பயிற்சி நிறைவு பெறும் நாள் முன்கூட்டியே பயிற்சி மையங்கள் / பிரிவுகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
  • பயிற்சியில் சேர்க்கை பெற்ற நபர்கள் பயிற்சியில் நேரடியாகப் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • அனைத்துச் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளிலும் ஆண்டு முழுவதும் சேர்க்கை நடைபெறுகிறது.
  • பயிற்சிகளுக்கான விண்ணப்பத்தை www.tanuvas.ac.in / www.tanuvasdde.edu.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பம், தகுதி சான்றிதழ் நகல் மற்றும் பயிற்சிக்கான கட்டணத்துடன் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகவும்.

பாடத் திட்டம்

  • ஒவ்வொரு பயிற்சிக்குமான பாடத் திட்டம் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பாட வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அனைத்துச் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளிலும் செய்முறை அமர்வுகள் மற்றும் அடையாளங்காணப்பட்ட பண்ணைகளில் தனிநபர்சார் செயல்முறைப் பயிற்சி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

பாடம் கற்பித்தல்/கற்றல் அமர்வுகள்

பயிற்சியில் சேர்க்கை பெற்ற நபர்களுக்கு ஒவ்வொரு பயிற்சிக்குமான பயிற்சிக் கையேடு அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு மாதம் அல்லது பயிற்சியின் கால அளவுக்குத் தக்க செய்முறைப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள அனைத்துப் பயிற்சி மையங்கள்மூலம் உரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தேர்வு மதிப்பீடுகள்

பயிற்சி மையங்கள் நடத்தும் தேர்வின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, பயிற்சி நிறைவு செய்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன.

சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

வரிசை எண் பயிற்சிப் பெயர் பயிற்சிக் காலம் கல்வித் தகுதி பயிற்சிக் கட்டணம்
1 கறவை மாடு வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
2 செம்மறியாடு வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
3 வெள்ளாடு வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
4 பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
5 உறை மோர் மூலம் பால் பொருட்கள் தயாரிப்பு 15 வேலை நாட்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 3000
6 பண்ணைக் கழிவு மேலாண்மை 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
7 முயல் வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
8 வெண்பன்றி வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
9 ஜப்பானியக் காடை வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
10 நாட்டுக்கோழி வளர்ப்பு 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000