தோற்றம்

கால்நடை உயிரித் தொழில்நுட்பம், கால்நடை பராமரிப்புப் பொருளியல், கால்நடை பராமரிப்புப் புள்ளியியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல், வன உயிரின அறிவியல் மற்றும் உழவியல் ஆகிய ஐந்து தனித்துவமான துறைகளை உள்ளடக்கிய, சிறப்பு மிக்க 25 ஆண்டுகள் நிறைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை அறிவியல் புலம் 996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


கல்வி

கல்விக்குழு, ஆராய்ச்சிக் குழு மற்றும் விரிவாக்கக் கல்விக் குழு ஆகியவற்றின் பரிந்துரைப்படி, கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கக் சேவையினை இப்புலத்தின் துறைகள் வழங்குவதை உறுதி செய்கிறது. அடிப்படை அறிவியல் கல்விக் குழுவுடன் கலந்தாலோசித்து புலத்தின் பாடத்திட்டங்கள் அவ்வப்போது கல்விக் குழுவால் நிர்ணயிக்கப்படும்.
தற்போது, கால்நடை உயிரித் தொழில்நுட்பம், கால்நடை பராமரிப்புப் பொருளியல், உயிர் புள்ளியியல் மற்றும் வன உயிரின அறிவியல் ஆகிய நான்கு எம்.வி.எஸ்சி. பாடத்திட்டங்கள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. மேலும், கால்நடை உயிரித் தொழில்நுட்பம், கால்நடைப் பராமரிப்பு பொருளியல், வன உயிரின அறிவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது. மேலும், தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக, இப்பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளால் முதுநிலை பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அடிப்படை அறிவியல் கல்விப் புலத்தின் சிறப்பு

அளவில் ஒரு சிறிய கல்விப்புலமாகஇருந்தபோதிலும், பல முதன்மையான மற்றும் புதுமையான திட்டங்களை உருவாக்கியுள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அறிவியல் துறை, தொழில்துறை, அரசு மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து கால்நடை அறிவியல், சுற்றுச்சூழல், மேய்ச்சல், தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகள் தொடர்புடைய துறைகளில் புதுமையான மற்றும் தேவை அடிப்படையிலான ஆராய்ச்சியை செயல்படுத்துகிறது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ஊரக வளர்ச்சி மற்றும் உயிரி வள ஆதாரங்கள் கண்டுபிடிப்பு, கால்நடை மருத்துவ அறிவியல் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நமது ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. நமது விரிவான, அதிநவீன ஆய்வகங்களைத் தவிர, கால்நடை பல்கலைக்கழகத்திற்கு பிரத்யேகமான பல ஆராய்ச்சி வசதிகள் உள்ளன. இவற்றில் தேசியத் தரச்சான்றிதழ் பெற்ற ரேபிஸ் தடுப்பூசி மருந்து ஆய்வகம், ஆன்லைன் தேர்வு மையம் மற்றும் பல புற ஆராய்ச்சி வசதிகள் உள்ளன.

மேலதிகத் தகவலுக்கு :

முனைவர் சி. வள்ளி,
முதல்வர், அடிப்படை அறிவியல் புலம்,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம்,
வேப்பேரி, சென்னை-600007, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-44-25389198
மின்னஞ்சல்: deanbasic@tanuvas.org.in