செம்மறிய ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம், சாண்டிநல்லா, நீலகிரி மாவட்டம்

வரலாறு

 • நீலகிரி மாவட்டம், சாண்டிநல்லாவில் செம்மறி ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம் 1950-51ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 • இதன் மொத்த நிலப் பரப்பளவு 708.67 ஏக்கர் ஆகும். இதில் சுமார் 500 ஏக்கர் மேய்ச்சல் புல்வெளியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 • இந்த நிலையமானது கடல் மட்டத்திலிருந்து 2090 முதல் 2235 மீட்டர் உயரத்தில் மித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது.

குறிக்கோள்

 • இனப் பாதுகாப்பினை முன்னிலைப்படுத்தி, நீலகிரி மலைப் பகுதியின் இனங்களான நீலகிரியினச் செம்மறியாடு மற்றும் தோடா இன எருமைகளைப் பாதுகாத்தல்
 • நீலகிரியின ஆட்டினத்தின் இறைச்சிப் பண்புகளை உயர்த்த அயல் நாட்டினச் செம்மறியாடுகளுடன் இனவிருத்தி மேற்கொள்ளல்
 • நீலகிரி ஆட்டினத்தினை மெரினோ மற்றும் ராம்புல்லே இனத்தோடு இனப்பெருக்கம் செய்து, அதன் உரோம உற்பத்தியின் அளவு மற்றும் தரம் உயர்த்தல்

உள்கட்டமைப்பு

 • சுமார் 85 இலட்சம் மதிப்பில் ஐந்து தளம் உயர்த்தப்பட்ட கொட்டகைள் கட்டப்பட்டன. இக்கொட்டகைகளில் உயர்தர பாலிவினைல் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஐந்து கொட்டகைகளில் மரப் பலகையிலான தளத்தினை மாற்றி பாலிவினைல் தரை தளம் 18 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
 • செம்மறியாடுகளை மிக எளிய முறையில் கையாளுவதற்காக மருந்து குளியல் செய்யும் தொட்டியுடன் கூடிய கட்டமைப்பு சுமார் 6 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.

சேவைகள்

 • விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

வல்லுநர்கள்

 • முனைவர் ந. பிரேமா, உதவிப் பேராசிரியர்
 • முனைவர் வீ. தவசியப்பன், உதவிப் பேராசிரியர்
 • மருத்துவர் ரா. பிரபாகர், உதவிப் பேராசிரியர்