1982ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் கால்நடை உணவியல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த நிலையம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
குறிக்கோள்கள்
புதிய மரபு சாரா தீவனங்களை கண்டறிந்து அதை கால்நடைகளுக்கான தீவனமாக மாற்ற உதவும் தொழில்நுட்பத்தை கண்டறிதல்.
மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மற்றும் மாடுகள் உட்கொள்ளும் தீவனப் பற்றாக்குறைக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்து அளித்து, தீவனங்களின் செரிமானத் திறனை அதிகரித்தல்.
இயற்கை பேரிடர் காலங்களில், கால்நடைகளை பராமரிப்பதற்கான தீவன தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
மதிப்புக் கூட்டப்பட்ட பால், இறைச்சி பொருட்கள் மற்றும் செயல்பாட்டு உணவுகளை உற்பத்தி செய்யும் பொருட்டு ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தை மேம்படுத்துதல்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தீவனப் பயிர்களை ஆடு மற்றும் மாடுகளுக்காக மதிப்பீடு செய்தல்.
கால்நடைகளுக்கு முழுத்தீவனத்தை குறைந்த விலையில் உருவாக்குதல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக் கலவையை உற்பத்தி செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு அளித்தல்.
தானுவாஸ் தாது உப்புக் கட்டியை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு அளித்தல்.
தீவன வங்கியை உருவாக்குதல்.
தீவனப்பயிர்களின் விதை உற்பத்திப் பிரிவை உருவாக்குதல்
கால்நடை மற்றும் கோழிகளுக்கான அடர் தீவனம், உலர் தீவனம் மற்றும் பசுந்தீவனத்தின் தரத்தை மதிப்பீடு செய்தல்.
சுய நிதித் திட்டங்கள்
தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக் கலவை தயாரிக்கும் மையம்
தாது உப்புக் கட்டி தயாரிக்கும் பிரிவு.
கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் தயாரிக்கும் பிரிவு.
தீவனப் பயிர்களின் விதை உற்பத்தி பிரிவு.
ஆராய்ச்சி
வேளாண் காடுகளின் மாதிரி பூங்கா உருவாக்கி, அதன் மூலம் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தல், அதை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்குதல்.
மர இலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மர இலைத் தூள், மர இலைகளின் தீவனக் கட்டி, குச்சித் தீவனம் ஆகியவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்தல் மற்றும் பிரபலப்படுத்துல்.
பல்வேறு வகையான வேளாண்காடு மாதிரிகளின் மூலம் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்களை உற்பத்தி செய்தல் மற்றும் அவற்றைப் பயன்படித்தி கால்நடைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட கறவை மாடுகளுக்கு பொருளாதார ரீதியாக தீவனமளிக்கும் வகையில் யூரியா ஊட்டமேற்றப்பட்ட முழுத்தீவனக் கட்டி தயாரித்தல்.
பசுந்தீவன இரகங்களான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ (பி.என்)5, தீவனச் சோளம் கோ-31 மற்றும் தீவன தட்டைப்பயறு கோ(எஃப்சி)8 விளைச்சலை மதிப்பீடு செய்தல்.
மரபு சாரா தீவனப் பொருட்களான சாமை, வரகு, சோயா மொச்சை தோல், மாம்பழத் தோல் கழிவு, மரவள்ளி கிழங்கு திப்பி மற்றும் விலங்குகளின் கரிமக் கழிவுகளை மதிப்பீடு செய்தல்.
கறவை மாடுகள் மற்றும் ஆட்டினங்களுக்கான பசுந்தீவனமாக சுபாபுல், வாகை, அரச மரம், ஆலமரம், கிளேரியா, ஒதியன், பலா மற்றும் மரவள்ளி ஆகிய மர இலைகள் மதிப்பீடு செய்தல்.
கல்வி மற்றும் பயிற்சி
இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கான உள்ளிருப்பு பயிற்சி அளித்தல்.
முதுநிலை மாணவர்களின் ஆராய்ச்சிக்குத் தேவையான ஆய்வுக் கூட வசதிகளை அளித்தல்.
ஆராய்ச்சிகள்/ ஆராய்ச்சி மாணவர்கள் / தொழிற்நுட்பர்களுக்கு அசையூண் வயிற்றில் நடைபெறும் செரிமான நிகழ்வுகளை ஆய்வக முறையில் அமைத்தல் குறித்த தொழில்நுட்பங்களைப் பற்றி பத்து நாள்கள் பயிற்சியைக் கட்டண முறையில் அளித்தல் (கட்டணத் தொகை ரூபாய் 10,000/- + சரக்கு மற்றும் சேவை வரி).
சாதனைகள்
நவீன வேளாண்மையில் புதுமையான விவசாயி விருதினை - ஸ்மார்ட் கூட்டமைப்பு 2021 ல் திரு. காந்தி அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்து.
அகில இந்திய ஒருங்கிணைந்த வேளாண்காடுகள் ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு, மத்திய வேளாண்காடுகள் ஆராய்ச்சி நிலையம், ஜான்சி மூலம் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட "வேளாண்காடுகள்" என்ற தலைப்பிற்கான புகைப்பட போட்டியில் இரண்டாவது பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு 540.5 மெட்ரிக் டன் தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக் கலவை மற்றும் 31.8 மெட்ரிக் டன் தாது உப்புக் கட்டிகளும் வழங்கப்பட்டன.
சேவைகள்
அடர் தீவனப் பொருட்கள் மற்றும் பசுந்தீவனத்தின் தரக் கட்டுப்பாட்டு ஆய்வக சேவை.
அசையூண் வயிற்றில் நடைபெறும் செரிமான நிகழ்வுகளை ஆய்வக முறையில் கண்டறிதல் பற்றிய தொழிற்நுட்ப பயிற்சி.
கால்நடை பண்ணையாளர்களுக்கு பசுந்தீவன உற்பத்தி, கலப்புத் தீவனம் தயாரித்தல் மற்றும் தீவன மேலாண்மை முறைகள் பற்றிய தொடர் ஆலோசனை வழங்குதல்.
கால்நடைப் பண்ணையாளர்களுக்கு பசுந்தீவன சாகுபடி, சேமிப்பு தொழிற்நுட்பங்கள், பசுந்தீவன விதை உற்பத்தி, வைக்கோல் ஊட்டமேற்றுதல், தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக் கலவை தயாரித்தல் மற்றும் தாது உப்புக் கட்டி தயாரித்தல் குறித்த பயிற்சி அளித்தல்.
தாது உப்புக் கட்டி மற்றும் தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக் கலவை விற்பனை செய்தல்.
தொழிற்நுட்ப சேவைகள்
கால்நடை உணவியல் நிலையத்தில் சேவைகளுக்கான கட்டணம் மற்றும் விற்பனை தகவல்கள்
அடர் தீவனம் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் – செயற்கை அசையூண் வயிற்று அனைத்து செரிமான சோதனைகளுக்கான மொத்தக் கட்டணம் ரூ.7,500/- + சரக்கு மற்றும் சேவை வரி
ஊட்டமேற்றப்பட்ட வைக்கோல் கட்டிகள்
கரும்புத் தோகைக் கொண்டு ஊறுகாய் புல் தயாரித்தல்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை உணவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம் - 603 203 செங்கல்பட்டு மாவட்டம்
தொலைபேசி எண்: +91-44-27451525
மின்னஞ்சல்: ian@tanuvas.org.in