dde

தொலைநிலைக் கல்வி இயக்ககம்

பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பிரிவு


பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி வரும் இப் பிரிவு பல்கலைக்கழகத் தலைமையிடம் அமைந்துள்ள மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 15.03.1994அன்று தொடங்கப்பட்டது. கால்நடைத் தொழிநுட்பத் தகவல்களை ஆவணப்படுத்துதல், வெளியிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதன்மூலம் இப்பிரிவு கால்நடை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் வேளாண் பெருமக்களிடையே தொழில்நுட்பத் தகவல்களைக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகளின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் காணொலி பாடங்கள் போன்றவற்றின் உற்பத்தியினை கால்நடை மருத்துவ அறிவியல் தகவல் சேவை மையம் மூலம் மேற்கொண்டு வருகிறது.

குறிக்கோள்

  • கால்நடை மற்றும் கோழி உற்பத்தி குறித்த தொழில்நுட்பப் புத்தகங்கள், அறிக்கைகள், கையேடுகள், சிற்றேடுகள் ஆகியவற்றை அச்சிட்டு வெளியிடுதல்
  • இளநிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டக் கல்வி அளித்தலுக்குத் தேவையான மாணவர் பதிவு அட்டைகள், விடைத்தாள்கள், மதிப்பெண் அட்டைகள் மற்றும் பிறவற்றை அச்சிடுதல்
  • பல்கலைக்கழகப் பணிகளுக்கான பதிவேடுகள், பற்றுச்சீட்டு, அறிக்கைகள் மற்றும் பிற படிவங்களை அச்சிடுதல்

சேவைகள்

  • இப் பரிவு "இந்தியக் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி இதழ்" என்கிற இரு மாத இதழையும், தனுவாஸ் தொழில்நுட்ப மலர் என்கிற இரு மாத இதழையும், "கால்நடைக் கதிர்" என்கிற தமிழ் மாத இதழையும், ஆங்கிலம் மற்றும் தமிழில் ‘தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் செய்தி மடல்’ என்கிற மாத இதழையும் அச்சிட்டு வெளியிடுகின்றது.
  • கால்நடை மற்றும் கோழியின வளர்ப்பு குறித்த புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் இப்பிரிவால் அச்சிடப்பட்டுப் பல்கலைக்கழகத்தின் வேளாண் தொழில்நுட்பத் தகவல் மையம் மூலமும், பல்கலைக்கழக விரிவாக்க மையங்கள் மூலமும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • இப்பிரிவு பல்கலைக்கழகத்தின் சார்பாகப் பிற அச்சுப் பணிகளையும் செய்து வருகின்றது, அவையாவன,
    • பல்கலைக்கழக நாள்காட்டி
    • பல்கலைக்கழக நாட்குறிப்பு
    • அனைத்துப் பல்கலைக்கழகக் கல்விசார் பதிப்புகள்
    • பட்டமளிப்பு விழா சார்ந்த அச்சுப் பணிகள்

இதழ்கள்

மடல்கள்

புத்தகங்கள்

உள்கட்டமைப்பு

அச்சிடுதல் மற்றும் புத்தகம் கட்டும் பணிகளுக்காக ஒற்றை வண்ணத் தாள் அச்சு ஆஃப்செட் இயந்திரம், இன்க்ஜெட் அச்சு இயந்திரம், பல வண்ண அலுவலக அச்சு இயந்திரம், ட்ரெடில் அச்சு இயந்திரம், புத்தகம் வெட்டும் இயந்திரம், ஹாட் மெல்ட் புத்தகம் கட்டும் இயந்திரம், தாள் மடிப்பு இயந்திரம், புத்தகம் தைக்கும் இயந்திரம், புத்தகம் அழுத்தும் இயந்திரம், லாமினேஷன் இயந்திரம் ஆகியன இப் பிரிவில் உள்ள வசதிகள் ஆகும்.

வல்லுநர்

  • முனைவர் ப.இரா. நிஷா, பேராசிரியர் மற்றும் தலைவர்

பேராசிரியர் மற்றும் தலைவர்,
பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பிரிவு,
தொலைநிலைக் கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600 051.
தொலைபேசி: 044 - 2555 4375
மின்னஞ்சல்: upd@tanuvas.org.in