சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் இளநிலை (பி.வி.எஸ்சி.) மாணவர்களுக்கு புள்ளியியல் பாடம் கற்பித்தல் 1959-60 ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்பு இயக்குனரகத்தில் உள்ள புள்ளியியல் நிபுணர்களின் பகுதி நேர சேவைகளைப் பயன்படுத்தித் தொடங்கப்பட்டது. பின்னர், 1966-ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு புள்ளியியல் கற்பிப்பதற்காக ஒரு தனித் துறையாக, கால்நடை பராமரிப்புப் புள்ளியியல் துறை தொடங்கப்பட்டது. இத்துறையின் முக்கிய செயல்பாடுகள் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கால்நடை பராமரிப்புப் புள்ளியியல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல். சோதனைகளை வடிவமைத்தல், தரவு செயலாக்கம் மற்றும் சோதனை முடிவுகளின் விளக்கம் அளிப்பது ஆகியன. பின்னர், இந்தத் துறையின் குறிக்கோள்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை கால்நடை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் இணைத்து மாற்றியமைக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பல்கலைக்கழக கணினி மையத்தை இந்தத் துறையுடன் இணைத்து, பல்கலைக்கழகம் / கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் கணினி வலையமைப்பை நிர்வகிக்கும் பொருட்டு 2000-01-ஆம் ஆண்டில் இத்துறையின் பெயரும் கால்நடை பராமரிப்புப் புள்ளியியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை என மாறுதல் செய்யப்பட்டது.
ஆசிரியர் பெயர் | வகிக்கும் பதவி | மின்னஞ்சல் | கைபேசி# |
---|---|---|---|
முனைவர் கோ. கதிரவன் | பேராசிரியர் மற்றும் தலைவர் | drkathir@tanuvas.org.in | +91-9444107485 |
மருத்துவர் சி. பாலன் | உதவிப் பேராசிரியர் | drbala005@gmail.com | balan.c@tanuvas.ac.in | +91-9843029964 |
மருத்துவர் கி. சித்ராம்பிகை | உதவிப் பேராசிரியர் | chitravet@gmail.com | chitrambigai.k@tanuvas.ac.in | +91-9884113000 |
பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடைப் பராமரிப்புப் புள்ளியியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறை, அடிப்படை அறிவியல் புலம், சென்னைகால்நடைமருத்துவ கல்லூரி, வேப்பேரி, சென்னை - 600 007 தொலைபேசி: +91-44-25304000 மின்னஞ்சல்: hodahsmvc@tanuvas.org.in