மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் , புதுக்கோட்டை

வரலாறு

17.10.1982 அன்று கோழியின ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகத் தோற்றுவி்க்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழிப் பண்ணைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தியது.

23.05.2017அன்று மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையமாக உயர்த்தப்பட்டது.

குறிக்கோள்

  • திறன் வளர்ப்புத் திட்டம் மற்றும் நாட்டுக்கோழிக் குஞ்சுகளை விவசாயிகளுக்கு வழங்கி நாட்டுக்கோழி வளர்ப்பினைப் பிரபலப்படுத்தல்
  • வான்கோழி குஞ்சுகள் வழங்குதல் மற்றும் பயிற்சியின் மூலம் வான்கோழி வளர்ப்பினைப் பிரபலப்படுத்தல்

விரிவாக்கப் பணிகள்

இம்மையம் அரசுத் துறைகளுடன் இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மற்றும் கோழிகளுக்கான பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு:

  • பண்ணை ஆலோசனைகள்
  • மையத்தில் மற்றும் மையத்திற்கு வெளியே பயிற்சிகள் நடத்துதல்
  • செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சிகளை விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு வழங்குதல்
  • கண்காட்சியகங்கள்
  • மக்கள் தொடர்பு நிகழ்வுகள்
  • விவசாயிகளுக்கான கற்றுணர்வு மற்றும் செயல்முறைப் பயிற்சிகள்
  • தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள்
  • விவசாயிகளுக்கு வங்கியில் நிதியுதவி பெற, கால்நடை மற்றும் கோழிகளுக்கான திட்ட அறிக்கைகளைத் தயாரித்து வழங்குதல்

சேவைகள்

  • விவசாயிகளுக்குத் தேவையான நாட்டுக்கோழிக் குஞ்சுகள், வான்கோழி, குஞ்சுகள், இராமநாதபுர வெள்ளைச் செம்மறியாட்டுக் குட்டிகள் வழங்கப்படுகின்றன.
  • புதுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள மாவட்ட விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வல்லுநர்கள்

  • முனைவர் தா. லூர்துரீத்தா, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • மருத்துவர் ரா. ஜோதிப்பிரியா, உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர் அ. ஷீபா, உதவிப் பேராசிரியர்
  • மருத்துவர் ச. இளவரசன், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம்,

தொழிற்பேட்டை அஞ்சல், மச்சுவாடி,

புதுக்கோட்டை – 622 004.

தொலைபேசி: 04322-271443

மின்னஞ்சல்: rrc@tanuvas.org.in