இப்பல்கலைக்கழகம் தனிச்சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி இயக்குநரகத்துடன் வலுவான ஆராய்ச்சி தளத்தைக் கொண்டுள்ளது. இவ்வியக்ககம், ஆராய்ச்சி முயற்சிகளை திட்டமிடுதல், தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆராய்ச்சி அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல், ஆராய்ச்சி திட்டங்களை கண்காணித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆவணங்களை தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை நல இயக்ககங்களின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிலையங்கள்/பண்ணைகள் மற்றும் ஆய்வகங்கள் மற்றும் உறுப்புக் கல்லூரிகள் மூலம் கால்நடை மற்றும் கோழி வளர்ப்போர், தொழில் முனைவோர் மட்டுமன்றி மொத்த சமூகமும் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு, தேசிய மற்றும் சர்வதேச முகமைகளின் நிதியுதவியுடன் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கொள்கைகளை வகுத்திடவும், ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவும் அமைப்பாக செயல்படுகிறது. கல்வி மற்றும் விரிவாக்கப்பணிகளை இணைத்து, விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.
பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு
துணைவேந்தரை அதன் தலைவராகக் கொண்ட ஆராய்ச்சிக் குழு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்த கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகும். இக் குழு கீழ்கண்டவற்றை பரிசீலித்து பரிந்துரைகளை அளிக்கும்:
பல்வேறு பல்கலைக்கழக அலகுகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி கால்நடை அறிவியல் துறையில் ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல்.
ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்.
கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சியை மேற்கொள்வது.
விஞ்ஞானிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நடந்து கொண்டிருக்கும் / முடிக்கப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களின் அறிக்கைகளை பகுப்பாய்வு செய்யவது.
மத்திய மாநில அரசுகள், பல்கலைக்கழக மேலாண்மைக்குழு, துணைவேந்தர் அல்லது பல்கலைக்கழக / முகமைகளின் பிற அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட கால்நடை பராமரிப்பு / கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான ஆராய்ச்சிகளை நெறிப்படுத்திடல்.
சிறப்பு ஆராய்ச்சி ஆய்வகங்கள்/ மையங்கள்
கோழியின நோய் ஆய்வகம், தலைவாசல்
பல்கலைக்கழக மைய ஆய்வகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை
ஆதாரசெல் ஆராய்ச்சி மற்றும் மறுசிரமைப்பு மருத்துவ மையம், சென்னை
ஆய்வக விலங்கின மருந்தியல் பிரிவு, மாதவரம் பால் பண்ணை, சென்னை
கால்நடைத் தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான மருந்துக் கண்காணிப்பு ஆய்வகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை
கோழியின நோய்ப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆய்வகம், நாமக்கல்
கால்நடை மருத்துவ ஆய்வின் பயன்பாடுசார் பரிமாற்றத்தளம், மாதவரம் பால் பண்ணை, சென்னை
தடுப்பூசி ஆராய்ச்சி மையம் - நுண்ணுயிரித் தடுப்பூசி, மாதவரம் பால் பண்ணை, சென்னை
தடுப்பூசி ஆராய்ச்சி மையம் – நச்சுயிரித் தடுப்பூசி, மாதவரம் பால் பண்ணை, சென்னை
கால்நடை உணவியல் நிலையம், காட்டுப்பாக்கம்
மனித மற்றும் விலங்கினத்திற்கிடையே பரவும் நோய்கள் ஆராய்ச்சிக்கூடம், மாதவரம் பால் பண்ணை, சென்னை
நாட்டின மாடு ஆராய்ச்சி மையங்கள் - பர்கூர், காங்கயம், புலிக்குளம், ஆலம்பாடி
கால்நடை மூலிகை ஆராய்ச்சி மையங்கள்
முயற்சிகளும் தொடர்புகளும்
இப்பல்கலைக்கழகம் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நிதியினை ஈர்த்து ஆராய்ச்சித் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாநில அளவிலான நிதி வழங்கும் முகமைகள்
தமிழ்நாடு அரசு
மாநில திட்டக்குழு
தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு வாரியம்
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், சென்னை
தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு நிறுவனம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
தேசிய அளவிலான நிதி வழங்கும் முகமைகள்
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, புது தில்லி
உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், புது தில்லி
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், புது தில்லி
உயிரி தொழில்நுட்பத் துறை, புது தில்லி
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புது தில்லி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புது தில்லி
ஆயுஷ் அமைச்சகம், புது தில்லி
தேசிய விலங்கு மரபியல் வள பணியகம், கர்னால்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், புது தில்லி
ஊரக வளர்ச்சி அமைச்சகம், புது டெல்லி
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு)
சர்வதேச முகமைகள்
உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் ஆராய்ச்சி கவுன்சில் (பிபிஎஸ்ஆர்சி), இங்கிலாந்து
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கனடா
செப்பிக் , பிரான்ஸ்
சர்வதேச அணுசக்தி சங்கம், வியன்னா, ஆஸ்திரியா
இங்கிலாந்து-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிக் குழு
இயக்குனரகத்தில் ஆசிரியர் பதவிகள்:
முனைவர் கு.விஜயராணி, ஆராய்ச்சி இயக்குநர்
டாக்டர் பி.நிஷாந்த், உதவிப் பேராசிரியர்
டாக்டர் சி.எம்.ஜெய்காந்த், உதவிப் பேராசிரியர்
மேலும் தகவலுக்கு :
முனைவர் கு.விஜயராணி
ஆராய்ச்சி இயக்குனர்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ,
மாதவரம் பால் பண்ணை , சென்னை - 600051.
தொலைபேசி: +91-44-2555 1583 | EPBX : +91-44-2555 1586/1587
மின்னஞ்சல்: dr@tanuvas.org.in