தனுவாஸ்

ஆராய்ச்சி இயக்குநரகம்

பல்கலைக்கழத்தின் முக்கிய ஆய்வுத் திட்டங்கள்


2020-21ல் பெற்ற பெருந்திட்டங்கள்

  • தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.500 இலட்சம் மதிப்பீட்டில் "கிராமப்புற விவசாயிகளின் மேம்பாட்டிற்காக உயர்தர மண்டல பண்ணைக் கால்நடை மருத்துவமனை" அமைக்கும் திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் ரூ.208.90 இலட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளில் பாலினம் அறியப்பட்ட விந்துவைப் பயன்படுத்தி இனப்பெருக்கத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இனப்பெருக்க மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்குதல் என்ற திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • செவ்வாடு, இராமநாதபுரம் வெள்ளை மற்றும் கச்சைக்கட்டிக் கருப்பு ஆகிய பூர்வீக ஆட்டினங்களை பாதுகாப்பதற்காக ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு ஆடு ஆராய்ச்சி மையத்தினை தென்தமிழ்நாட்டில் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இருநூறு நாட்டு கோழி விவசாயிகளிடையே "குஞ்சு பொரிப்பக மேலாண்மை, கோழி இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் கோழிப்பண்ணை தொழில் முனைவோர் மேம்பாடு" என்ற திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் அனுமதி வழங்கியுள்ளது.
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்பொருட்டு கன்னி ஆடு, கொடி ஆடு மற்றும் சேலம் கருப்பு நாட்டு வெள்ளாடு இனங்களில் மரபணு மேம்பாடு செய்திட 1000 உறை விந்துக் குழல்களை உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு ரூ.149 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகத்தில் கால்நடைமருத்துவ அறிவினைப் பேணும் அறக்கட்டளையின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.71.94 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மையம்-வைரஸ் தடுப்பூசிகளை வலுப்படுத்தும் திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2021-22இல் பெற்ற பெருந்திட்டங்கள்

  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் செம்மறி மற்றும் வெள்ளாட்டினங்களைப் பாதுகாக்க பல்கலைக்கழகத்தில், ரூ.434.75 இலட்சம் மொத்த நிதி ஒதுக்கீட்டில் "மெட்ராஸ் ரெட் செம்மறி ஆடு இடுபொருள் மையம் அமைத்தல்" மற்றும் "நவீன சேலம் கருப்பாட்டுப் பண்ணை அமைத்தல்" ஆகிய இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் ரூ.254.50 இலட்சம் மதிப்பீட்டில் விலங்குவழி மனித நோய் கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது.
  • செவ்வாடு, இராமநாதபுரம் வெள்ளை மற்றும் கச்சைக்கட்டிக் கருப்பு ஆகிய பூர்வீக ஆட்டினங்களை பாதுகாப்பதற்காக ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு ஆடு ஆராய்ச்சி மையத்தினை தென்தமிழ்நாட்டில் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை அதிகரிக்க, ரூ.200 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் "டானுவாஸ் கிராண்ட் சப்ளிமெண்ட் மூலம் கறவை மாடுகளுக்கு புத்துயிரூட்டும் திட்டம்" என்ற திட்டம் ரூ.200 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு கறவை மாடுகளுக்கு தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், குறைந்த செலவில் கால்நடைகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக பல்கலைக்கழகத்திற்கு வழங்கட்டுள்ளது .