தோற்றம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகச் சிகிச்சையியல் இயக்குநரகம், கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கல், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பரிமாற்றம், மருத்துவ மனித வள மேம்பாடு மற்றும் மக்களைச் சென்றடைதல் ஆகியற்றை மேற்கொள்ளும், நாட்டின் முதல் நிர்வாக ரீதியான அமைப்பு ஆகும்.
நோயறிதல், சிகிச்சை மற்றும் சிகிச்சை மேலாண்மை ஆகியவற்றில் இவ்வியக்ககம் முக்கிய பங்காற்றி வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சி அளிப்பதோடு, ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி வசதிகளையும் வழங்குகிறது. இம்மையவியல், நோயறிதல், நோய்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் வெளிநாட்டு மற்றும் தேசிய பயிற்சி திட்டம் ஆகியவை குறித்த தற்போதைய அறிவை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை இப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

குறிக்கோள்கள்

  • பல்கலைக்கழகத்தின் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல்.
  • பல்கலைக்கழகத்தின் அனைத்து வளாகங்களிலும் கால்நடை மருத்துவப் பாடங்களின் ஆராய்ச்சியை திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வையிடுதல்.
  • கல்லூரி முதல்வர்கள், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க கல்வி இயக்குநர்கள் ஆகியோருடன் இணைந்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
  • தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் களப்பணியாளர்களுக்கு பயிற்சித் திட்டத்தை வழங்குதல்.
  • விலங்குகள் நலச் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • இப்பல்கலைக்கழகத்தின் பயிற்றுவிக்கும் மருத்துவமனைகளில் நடமாடும் கால்நடை மருத்துவ வசதிகளை அளித்தல்.
  • தமிழ்நாட்டில் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் தொடர்பான களப்பிரச்சினைகளை கண்டறிந்து, மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை வடிவமைத்தல்.

கால்நடை மருத்துவமனைகள்

இவ்வியக்ககத்தின் கீழ் ஏழு பயிற்றுவிக்கும் மற்றும் ஒரு புற கால்நடை மருத்துவமனைகளும் உள்ளன, அவற்றில் நான்கு நன்கு நிறுவப்பட்டு நீண்ட ஆண்டுகளாக செயல்படுகின்றன, மீதமுள்ள மூன்று நிறுவப்பட்டு பலப்படுத்தப்படுகின்றன.

மருத்துவமனை நேரங்கள்:

வேலை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) 08.00 மு.ப. - 01.00 பி.ப.
சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்கள் 08.00 மு.ப. - 11.30 மு.ப.

  • கால்நடை மருத்துவமனைகளில் தரமான கால்நடை மருத்துவ சேவை மற்றும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுகிறது.
  • சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய இரண்டு இடங்களிலும் பெரிய மற்றும் சிறிய விலங்குகளுக்கான அவசரகால சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன.

பதவியில் உள்ள ஆசிரியர் (இயக்குநரகத்தின் கீழ்)

  • பேராசிரியர்கள் -
  • இணைப் பேராசிரியர்கள் -
  • உதவி பேராசிரியர்கள் -

மேலும் தகவல், தொடர்பு:

முனைவர் டி. சத்தியமூர்த்தி,
சிகிச்சையியல் இயக்குநர்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகம்,
வேப்பேரி, சென்னை-600007, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-44-25381366
மின்னஞ்சல்: dc@tanuvas.org.in