dde

தொலைநிலைக் கல்வி இயக்ககம்

செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்


செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

தமிழ் நாட்டின் ஊரகப் பொருளாதாரத்தில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு மற்றும் அது சார்ந்த வளர்ப்பு முறைகளில் அறிவியல் சார் தகவல் தேவைகள் குறித்த கற்றல் வாய்ப்புகளை வழங்குவது, கால்நடை மற்றும் கோழி வளர்ப்புத் தொழில்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுவதோடு எதிர்நோக்கிய சமூக பொருளாதார மாற்றங்களையும் திறன் வாய்ந்த மனித ஆற்றல் தேவையை பூர்த்தி செய்திடவும் உதவும்.

இதனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் எழுத, படிக்கத் தெரிதல் முதலான குறைந்த கல்வித் தகுதி முதற்கொண்டு பட்டப் படிப்பு கல்வித் பெற்றவர்களுக்கு 10 திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தப் பயிற்சிகளுக்கான கால அளவு 15 முதல் 45 நாட்கள் (வேலை நாட்கள்) ஆகும். இவற்றிற்கான பயிற்சிக் கட்டணம் ரூபாய் 3000/- முதல் ரூபாய் 15000/- வரை ஆகும். எனினும், பெரும்பாலான பயிற்சிகளின் கட்டண அளவு ரூபாய் 3000/- முதல் ரூபாய் 5000/- வரை ஆகும். செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்த விவரம், கல்வித் தகுதி, பயிற்சிக் காலம், பயிற்சிக் கட்டணம் போன்றவை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர்க்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, செயல் முறைப் பயிற்சியும் தேர்வு செய்யப்பட்ட பண்ணைகள் / தகுந்த இடங்களில் அவர்களின் திறன்கள் மற்றும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் வழங்கப்படும்.

சேர்க்கை விவரங்கள்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்கள் மற்றும் பயிற்சிக் கட்டணம் பெற்ற பிறகு, இணைப்பில் இடம்பெற்ற அனைத்துப் பயிற்சிகளிலும் தகுதி வாய்ந்த நபர்கள் ஆண்டு முழுவதும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
  • தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பயிற்சி மையங்கள் / பிரிவுகள் மூலமும், தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலமும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.
  • அனைத்துத் தகுதி வாய்ந்த / தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்குப் பயிற்சி தொடங்கும் நாள் மற்றும் பயிற்சி நிறைவு பெறும் நாள் முன்கூட்டியே பயிற்சி மையங்கள் / பிரிவுகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
  • பயிற்சியில் சேர்க்கை பெற்ற நபர்கள் பயிற்சியில் நேரடியாகப் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • அனைத்துச் செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளிலும் ஆண்டு முழுவதும் சேர்க்கை நடைபெறுகிறது.
  • பயிற்சிகளுக்கான விண்ணப்பத்தை www.tanuvas.ac.in / www.tanuvasdde.edu.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பம், தகுதி சான்றிதழ் நகல் மற்றும் பயிற்சிக்கான கட்டணத்துடன் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகவும்.

பாடத் திட்டம்

  • ஒவ்வொரு பயிற்சிக்குமான பாடத் திட்டம் பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பாட வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அனைத்துச் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளிலும் செய்முறை அமர்வுகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பண்ணைகளில் தனிநபர் சார் செயல்முறைப் பயிற்சி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

பாடம் கற்பித்தல் / கற்றல் அமர்வுகள்

பயிற்சியில் சேர்க்கை பெற்ற நபர்களுக்கு ஒவ்வொரு பயிற்சிக்குமான பயிற்சிக் கையேடு அச்சிடப்பட்டு, வழங்கப்படுகிறது. 15 நாட்கள் அல்லது பயிற்சியின் கால அளவுக்குத் தக்க செய்முறைப் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள அனைத்துப் பயிற்சி மையங்கள்மூலம் உரிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தேர்வு மதிப்பீடுகள்

பயிற்சி மையங்கள் நடத்தும் தேர்வின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, பயிற்சி நிறைவு செய்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன.

செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

வரிசை எண் பயிற்சிப் பெயர் பயிற்சிக் காலம் கல்வித் தகுதி பயிற்சிக் கட்டணம்
1 பால் பண்ணை உதவியாளர் 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
2 பால் பதன நிலைய உதவியாளர் 30 வேலை நாட்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 10000
3 பால் மற்றும் பால் பொருட்கள் தரக் கட்டுப்பாடு உதவியாளர் 15 வேலை நாட்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 5000
4 தீவன ஆலை மேற்பார்வையாளர் 15 வேலை நாட்கள் தமிழில் எழுத, படிக்க ரூபாய் 3000
5 தீவனப் பகுப்பாய்வுத் தொழில்நுட்ப உதவியாளர் 45 வேலை நாட்கள் ஏதேனும் பி.எஸ்சி பட்டத் தேர்ச்சி (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) / தீவனப் பகுப்பாய்வில் முன் அனுபவத்துடன் ஏதேனும் இளநிலைப் பட்டம் ரூபாய் 15000
6 கால்நடைப் பண்ணை மேலாளர் 30 வேலை நாட்கள் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 5000
7 கோழிப் பண்ணை மேலாளர் 30 வேலை நாட்கள் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 5000
8 குஞ்சுப் பொரிப்பக மேற்பார்வையாளர் 15 வேலை நாட்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 3000
9 கோழிப் பண்ணை மேற்பார்வையாளர் 15 வேலை நாட்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 3000
10 கோழியின தடுப்பூசி மற்றும் அலகு வெட்டுதலின் தொழில்நுட்பம் 15 வேலை நாட்கள் 8ஆம் வகுப்புத் தேர்ச்சி ரூபாய் 3000