vcri, orathanadu

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு

விரிவாக்கப் பணிகள்

அண்மைக்கால விரிவாக்கப் பணிகள்

இக் கல்லூரி, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளது. இச் செயல்பாடுகளின் முக்கிய நோக்கங்கள் வருமாறு: (1) பயனாளிகளைச் சென்றடைதல் மற்றும் அவர்களுக்கு அறிவதிகாரம் அளித்தல்; (2) மாணவர்களை பொறுப்புள்ள மற்றும் சமுதாயத்திற்கு உகந்த குடிமக்களாக மாற்றுவது. இக் கல்லூரி செய்த அண்மைக்கால விரிவாக்கப் பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை ஒட்டுண்ணி துறை, “ஒருங்கிணைந்த வேளாண்மையில் கால்நடையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் 03.02.2021 முதல் 11.02.2021 வரை பயிற்சி அளித்தது. இப்பயிற்சியில் 15 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒரத்தநாடு 16.02.2021 முதல் 18.02.2021 வரை “மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் - பால் தொழில் முனைவோர்க்கான நுழைவாயில்” என்ற தலைப்பில் நபார்டு நிதியுதவியுடன் மூன்று நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்தது.
  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை பராமரிப்பு விரிவாக்கக் கல்வித் துறை, “தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மண்டல விவசாயிகளின் நிலையான வாழ்வாதாரத்திற்கான ஒரு கருவியாக ஒருங்கிணைந்த வேளாண்மை முறை” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆராய்ச்சி வாரியத்தின் ிதியுதவியின் கீழ் மொத்தம் 123 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 2021 ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் தினத்தை உலக மகளிர் தினத்தை “தலைமையில் பெண்கள்: கோவிட்-19 உலகில் சமமான எதிர்காலத்தை உருவாக்குவது” என்ற தலைப்பில் கொண்டாடியது..
  • கால்நடை நுண்ணுயிரியல் துறை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி ஐ.சி.ஐ.சி.ஐ.சி. அறக்கட்டளை ஆகியவை இணைந்து “கோவிட்-19 நெருக்கடி சுகாதார மேலாண்மை – நோய்களைக் கண்டறிதல் மற்றும் கால்நடைகளுக்கு ஆரம்ப சுகாதார கவனிப்பு” என்ற தலைப்பில் ஒரு விருந்தினர் சொற்பொழிவு 21.05.2021 அன்று நடத்தின. புதுக்கோட்டை, நாகப்பட்டினம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்கள் இந்த இணையவழிக் கருத்தரங்கில் கலந்து கொண்டன.
  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உலக சுற்றுச்சூழல் தினம் 2021-ஐ 05.06.2021 அன்று கொண்டாடியது.
  • 'கால்நடை மற்றும் கோழியினங்களுக்கு முதல் உதவி' என்ற தலைப்பில் 24.06.2021 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய சமூகத்தினரின் நலனுக்காக ஒரு நாள் பிராந்திய கருத்தரங்கு ஒன்றுக்கு கால்நடை மருந்தியல் மற்றும் நச்சு இயல் துறை ஏற்பாடு செய்திருந்தது. தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 454 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
  • கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயியல் துறை, 27.07.2021 மற்றும் 30.07.2021 ஆகிய நாட்களில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் “மரபு சார் கால்நடை மருத்துவம்” என்ற திட்டத்தின் கீழ் உள்ள பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த விவசாயிகளுக்காகப் பயிலரங்கம் நடத்தியது. இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
  • இக் கல்லூரிக் கால்நடை மருத்துவ வளாகம் மற்றும் தஞ்சாவூர் கால்நடை பராமரிப்புத் துறை ஆகியன இணைந்து 28.07.2021 அன்று பட்டுக்கோட்டை கால்நடை மருத்துவமனையில் சிறப்பு கால்நடை சுகாதார முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. முகாமில் நாய்களுக்கு 85 ரேபிஸ் தடுப்பு தடுப்பூசிகள் அளித்து மலட்டுத்தன்மை உள்ள 30 மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் துறை, 03.08.2021 மற்றும் 04.08.2021 ஆகிய தேதிகளில் தெரு நாய்கள் மற்றும் உரிமையாளருக்கு சொந்தமான நாய்களின் நலனுக்காக இரண்டு நாள் கால்நடை பிறப்பு கட்டுப்பாட்டு முகாமை நடத்தியது.
  • கால்நடை பராமரிப்பு விரிவாக்கக் கல்வித் துறை, 17.08.2021 மற்றும் 18.08 ஆகிய தேதிகளில் “தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மண்டல விவசாயிகளின் நிலையான வாழ்வாதாரத்திற்கான ஒரு கருவியாக ஒருங்கிணைந்த பண்ணைய முறை” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சியை நடத்தியது. இதில் மொத்தம் 64 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
  • ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 17.09.2021 அன்று உலக ஓசோன் தினத்தைக் கொண்டாடியது. வளாகத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் நடும் ஏற்பாடு செய்யப்பட்டது
  • கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை மூலம் தேசிய பசு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 23 வேலையற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு "பசுக்களில் செயற்கை கருவூட்டல்" குறித்து ஒரு மாத வளாகத் திறன் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
  • இக் கல்லூரி, 01.11.2021 முதல் 05.11.2021 வரை விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடித்தது. கடைபிடிப்பின் ஒரு பகுதியாக, நேர்மை உறுதிமொழி, “ஊழலைத் தடுப்பதில் மாணவர்களின் பங்கு” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டி மற்றும் “ஊழலை ஒழிப்பது – வெளிப்படைத்தன்மையா? அல்லது நன்னடத்தையா?” என்ற தலைப்பில் விவாத மேடை ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 01.11.2021 மற்றும் 02.11.2021 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன.
  • கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை,, மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிறுவனம் மூலம் முப்பது கள கால்நடை மருத்துவர்களுக்கு "விலங்கு இனப்பெருக்கத்தில் இமேஜிங்கின் பயன்பாடு" என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சியை ஏற்பாடு செய்தது.
  • கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக விலங்கு-வழி நோய் தினத்தித்தினை ஒட்டி இலவச வெறிநோய் தடுப்பு தடுப்பூசி முகாம் 06.07.2022 அன்று நடத்தப்பட்டது. இத்திட்டத்தில் மொத்தம் 164 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. விலங்கு-வழி நோய்கள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
  • கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் துறை, காவிரி டெல்டா பகுதியில் உள்ள கள கால்நடை மருத்துவர்களுக்கு 27.09.2022 மற்றும் 20229 தேதிகளில் “வெறிநோய், லெப்டோஸ்பிரோசிஸ் மற்றும் புருசெல்லோசிஸ் போன்ற விலங்கு-வழி நோய்கள்” குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிலரங்கம் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் காவிரி டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த 100 கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.