vcri, Theni

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேனி

கல்வி சிறப்புப் பிரிவு

வரலாறு

கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்வி பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக 2020-2021 ஆம் ஆண்டு கல்வி சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வித் திறனைக் கண்காணித்து மேம்படுத்துவதே இதன் தலையாய நோக்கம் ஆகும்.

குறிக்கோள்கள்

  • ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளுதல்
  • இளநிலைக் கல்வி தொடர்புடைய கல்வி அட்டவணைகளைத் தயாரித்து கால்நடை மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச வழிகாட்டுதல் 2016 ன் விதிமுறைகளின் படி கல்வி தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒருங்கிணைத்தல்
  • வகுப்புகளை சுமூகமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் பருவத் தேர்வு, ஆண்டுத் தேர்வுகளை நடத்துதல்

உள்கட்டமைப்பு

  • ஒலி ஒளி காட்சி வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள்
  • பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களை அச்சிடுதல் பிரதியெடுத்தலுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் கேட் பொலி வசதியுடன் கூடிய தேர்வுக்கூடங்கள்

செயல்பாடுகள்

  • கல்லூரியில் சேர்ந்தவுடன் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்வி திட்டம், உதவித்தொகை காப்பீடு மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து முதலாமாண்டு அறிமுகக் கூட்டத்தை நடத்துதல்.
  • கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் வன்கொடுமை செய்வதைக்தடுக்க கல்லூரி அளவிளான வன்கொடுமைத் தடுப்புக் குழுவை உருவாக்கி பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி தேவையுள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் மாணவர்களுக்கான கல்விப் பதிவை மேற்கொள்ளுதல்
  • ஒவ்வொரு மாணவரின் கல்வி மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் ஊக்கப்படுத்தவும் வழிகாட்டி ஆலோசகர்களை நியமித்தல்
  • ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் பாட ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரித்து கால அட்டவணையை இறுதி செய்தல்
  • முதலாமாண்டிற்கு வரும் மாணவர்களுக்கு கல்வித்திட்டம் உதவித் தொகை, காப்பீடு திட்டம் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தின் விதிகள் பற்றிய விவரங்களை அறிமுகப்படுத்துதல்
  • ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளின் அட்டவணையை தயாரித்தல் பருவத்தேர்வு ஆண்டுத் தேர்வு மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தேர்வை நடத்துதல்
  • மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளான சான்றிதழ் சரிபார்ப்பு கல்விக் கட்டணத்தை வசூலித்தல், இட ஒதுக்கீடு கடிதம் அளித்தல், சான்றிதழ் பராமரிப்பு, மற்ற கல்லூரிகளுக்கான நிதி பரிமாற்றம் மற்றும் சேர்க்கை தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பல்கலைக்கழகத்திற்கு அளித்தல்
  • பாதுகாப்பான படிக்கும் சூழலை உறுதி செய்வதற்கான வளாகத்தில் கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தல்
  • மாணவர்களுக்கான உறைவிட பயிற்சித் திட்ட செயலாக்கம், உறைவிட பயிற்சி உதவித்தொகை வழங்கல் மற்றும் இறுதி நேர்க்காணல் தேர்வுக்கான ஏற்பாடு செய்தல்
  • பல்கலைக்கழகத்தின் மானியங்கள் எண்டோவ்மென்ட் விருதுகள், மூவலூர் ராமாமிர்தம் உயர்க்கல்வி உறுதித் திட்டம், பட்டியலின் மெட்ரிக் மற்றும் உயர்கல்வி உதவித்தொகை, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட போஸ்ட் மெட்ரிக் மற்றும் இலவச கல்வி உதவித்தொகை தொடர்பான செயல்பாடுகள்

சேவைகள்

  • கல்வி உதவித்தொகை, கல்விக் கடன்கள் போன்றவற்றிற்காக மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குதல்.
  • அடையாள அட்டை மற்றும் நூலக அட்டை வழங்க ஏற்பாடு செய்தல்.
  • மாற்றுச் சான்றிதழ் மற்றும் நடத்தைச் சான்றிதழ் தயாரித்து வழங்குதல்.
  • பல்கலைக்கழக பட்டமளிப்பு மற்றும் கல்லூரி நாளில் வழங்கப்பட வேண்டிய விருதுகள் பதக்கப் பட்டியல்களை தயாரித்தல்
  • நடப்பு கல்வி ஆண்டிற்கான நாட்காட்டி மற்றும் பாட அட்டவணையை தயாரித்தல்
  • வகுப்பறைகளைப் பராமரித்தல்
  • முதல்வர் மற்றும் இதர அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மாணவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்பாடு செய்தல்.
  • மாணவர்களுக்கான களப்பயணங்கள் மற்றும் கல்விப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்தல்.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
கல்வி சிறப்புப் பிரிவு
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி, தேனி – 625 531.
மின்னஞ்சல்: edu-vcri-thn@tanuvas.org.in