கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், செயலமுறைப் பயிற்சிகளையும் வழங்க ஏதுவாக நிர்வாக, கல்வி மற்றும் இதர உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகள், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள், கால்நடை உற்பத்தித் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான கால்நடை பண்ணை வளாகம், விலங்குகளின் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க கால்நடை சிகிச்சை வளாகம் போன்றவை நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
முதல்வர் அறை, முதல்வர் அலுவலகம், கல்வி சிறப்புப் பிரிவு, உயிரி – பொறியியல் பிரிவு, கண்காணிப்பு அறை, கணினி அறை, கூட்ட அரங்கு, கலையரங்கம், தேர்வுக் கூடம் மதிப்பீட்டுக் கூடம் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான மதிய உணவுக் கூடம் ஆகியவை அடங்கியுள்ளன.
ஒவ்வொரு கல்வித்துறைக்கும் ஆய்வகங்கள் செயல்முறை வகுப்பறைகள், விரிவுரைக் கூடங்கள், கருத்தரங்கம், குழு விவாத அறை, ஒலி-ஒளி ஆய்வுக்கூடம், கால்நடை ஆலோசனைப் பிரிவு, திறன் மேம்பாட்டு ஆய்வகம், பெரிய மற்றும் சிறு பிராணிகளுக்கான அறுவை சிகிச்சைக் கூடங்கள், ஊடுகதிர் ஆய்வகம், மத்திய தகவல்ஆய்வகம், ஒருங்கிணைந்த நோய்க் கண்டறியும் ஆய்வகம் மருந்தியல் மற்றும் நச்சியல்ஆய்வகங்கள், பூச்சியியல் மற்றும் ஒரு செல் உயிரி ஆய்வகங்கள், குடற்புழு ஆய்வகம், உடலியல் ஆய்வகம், உடற்கூறியல் ஆய்வகம், உயிர்வேதியியல் ஆய்வகம்,பகுப்பாய்வு உபகரணங்கள் மற்றும் பராமரிப்பு ஆய்வகம், தீவன செயலாக்கம் மற்றும் கலவை ஆய்வகம், ஆற்றல் வளர்ச்சிதை மாற்ற ஆய்வுக்கூடம், தீவன மற்றும் தீவனப் பகுபாய்வு ஆய்வகம், மத்திய கணினி ஆய்வகம், திசு நுண் ஆய்வகம், மருத்துவ நோயியல் ஆய்வகம், நோயெதிர்ப்பு ஆய்வு மற்றும் பூஞ்சையியல் ஆய்வகம் நச்சுயிரியியல் ஆய்வகம் உள்ளிட்ட ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.