விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்கள்: ஜீவ ஜந்து கல்யாண் திவாஸ் (16.02.2021) உலக விலங்குவழி பரவும் நோய்கள் தினம் (06.07.2021 மற்றும் உலக வெறிநோய் தினம் (28.09.2021) ஆகிய தினங்களில் நடைபெற்ற இலவச வெறிநோய்த் தடுப்பூசி முகாம்களில் 173 நாய்களுக்கு இலவச வெறிநோய்த்தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்திய வேளாண் அறிவியல் கழக நிதி உதவியுடன் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கண்காட்சி, 11.11.2021 முதல் 12.11.2021 வரை கால்நடை மற்றும் கோழிப்பண்ணைக்கான ஆரோக்கியம் மற்றும் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தும்” என்ற தலைப்பில் இரண்டு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டது. கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தேவதானப்பட்டி கிராமத்தின் 43 பட்டியலின பயனாளிகளும், கெங்குவார்பட்டியின் 42 பட்டியலின பயனாலிகளும் கலந்துகொண்டனர். பயிற்சித் திட்டத்தின் போது இலாபகரமான கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்புக்கான அறிவியல் தொழில்நுட்பங்களின் நன்மைகள், தீவன மேலாண்மை, பசுந்தீவன சாகுபடியின் முக்கியத்துவம், கொட்டகை அமைப்பு, இனப்பெருக்கம் மற்றும் நோய் மேலாண்மை, அக மற்றும் புற ஒட்டுண்ணிகளின் முக்கியத்துவமும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், மற்றும் பண்ணை சுகாதாரம் குறித்தும் விளக்கப்பட்டது. பயனாளிகளுக்கு ”இலாபகரமான கால்நடைகள் மற்றும் கோழி மேலாண்மை நுட்பங்கள் ” பற்றிய கையேடுகள் மற்றும் தடுப்பூசி மற்றும் குடற்புழுநீக்கத்தின் முக்கியத்துவம் ” குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. ”தீவனம் மற்றும் தீவன விதைகள்” பற்றிய கண்காட்சி நடத்தப்பட்டது.
ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து 10.03.22 அன்று நடைபெற்ற சிறப்பு சிகிச்சை முகாமில் பசுக்கள், செம்மறி ஆடுகள், நாய்கள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 105 கால்நடைகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. புள்ளக்காபட்டி கிராமத்தில் 29.04.22 அன்று கோமாரி நோய் மற்றும் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
25.01.2022 அன்று கால்நடை சிகிச்சை வளாக பேராசிரியர்களைக் கொண்ட குழு, தேனி லட்சுமிபுரத்தில் உள்ள பண்ணையைப் பார்வையிட்டு ஆய்வக மாதிரிகளை பரிசோனைக்கு கொண்டுவரப்பட்டு, பண்ணையிலுள்ள பசுக்களின் உடல்நலனை உயர்த்தத் தேவையான தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
கால்நடை சிகிச்சை வளாகப் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர். இரா.உமாராணி அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுள்ள யானையின் கண் நோய்களுக்கு தொடர்சிகிச்சையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். கால்நடை மருத்துவம் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ”உலக விலங்கு வழி பரவும் நோய்களின் தினத்தை” முன்னிட்டு சிறப்புரையாற்றினார்.