“தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றார் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் . மாணவர்கள் தங்களின் கால்நடை அறிவியல் புலமையை மட்டுமின்றி தமிழிலும் சிறந்து விளங்க தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி என்றும் ஊன்றுகோலாய் அமையும். அதற்கு முன்னேற்பாடாக பொருநை தமிழ் மன்றம் 02.06.2022 அன்று முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. நமது கால்நடை மருத்துவக்கல்லூரி, இது வன விலங்குகள் பற்றி படிக்கவும் தெரிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் உகந்த இடமாகத் திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் பலதரப்பட்ட காடு வகைகள் உள்ளன.மேலும் இந்த மாவட்டத்தில் ஆறுகள், பாய்ந்து வனவிலங்குகள் வாழ ஏதுவான இடமாக திகழ்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை வனவிலங்கு சரணாலயம் பலதரப்பட்ட தாவரங்களையும் வன விலங்குகளையும் கொண்டுள்ளது. தேனி மாவட்டம் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு விலங்குகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஏதுவான ஒரு மாவட்டமாக திகழ்கிறது.
06.05.2022 அன்று முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன்,முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி, அவர்கள் சிலம்பன் வனவிலங்கு சங்கத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வனவிலங்கு சங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரண்டாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆகிய இரு நாட்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 07.05.2022 அன்று இறகுகள் அமிர்தா இயற்கை அமைப்பின் நிறுவனர் மற்றும் பிரபல வனவிலங்கு புகைப்பட கலைஞரும் இயற்கை ஆர்வலருமான திரு.ரவீந்திரன் நடராஜன் அவர்கள் வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் நெறிமுறைகள் மற்றும் பறவைகளைப் பார்க்கும் அடிப்படைகள் என்ற தலைப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார். 08.05.2022 அன்று அடுக்கம் மற்றும் கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப் பகுதிகளில், வனத் துறையினருடன் இணைந்து இயற்கை நடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.