cppm

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி, ஓசூர்

மாணவர்கள் விடுதி


மாணவ, மாணவியர் இருபாலருக்கும் தனித்தனியாக இக்கல்லூரி வளாகத்திற்குள் நன்கு கட்டமைக்கப்ப்பட்ட விடுதி வசதி உள்ளது. மேலும் ஓர் அறைக்கு இரண்டு நபர்கள் தங்கும் வசதியுடன் ஜன்னல்களில் கொசுவலையுடன் பொருத்தப்பட்டு நன்கு காற்றோட்டமாக உள்ளன.மாணவர்களுக்கு வெந்நீர், RO குடிநீர், உட்புற உடற்பயிற்சி கூடம், சலவை இயந்திரம், 25 KVA ஜெனரேட்டர், CCTV கண்காணிப்பு கேமராக்கள், விரல் பயோமெட்ரிக், 24 மணிநேர பாதுகாப்பு மற்றும் உணவு விடுதியுடன் உள்ளன. மாணவர்களுக்கு மலிவு விலையில் தரமான மற்றும் சுகாதாரமான உணவை வழங்கபடுகின்றன.
கல்லூரி வளாகத்திற்குள் மாணவர் நலன் மற்றும் சுகாதார வசதிக்காக மாணவர் சுகாதார மையம் அமைந்துள்ளது மற்றும் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவரின் உடல்நலப் பரிசோதனைக்காக ஒரு மருத்துவ அலுவலர் வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் வருகை தருகிறார்.