இலக்கு

கால்நடை மருத்துவம், உற்பத்தி மற்றும் உணவு அறிவியல் துறையில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் சிறந்து விளங்கிட விழைகிறது. அத்துடன், சமூகம்-பொருளாதாரம்-சுற்றுச்சூழல் இயைந்த அணுகுமுறையை ஏற்று, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கால்நடைகள் மற்றும் கோழி உற்பத்தித்திறனுக்கான அறிவியல் அறிவு மற்றும் திறன்களைப் பரப்புவதில் முன்னணி வகிக்கும்.

பணி

கால்நடை மருத்துவம், உற்பத்தி மற்றும் உணவு அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சிதனை அரசின் ஒத்துழைப்புடன் மேம்படுத்துவதோடு விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டு கிராமப்புற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ் நாடு அரசினால் நிறுவப்பட்டது.

நோக்கங்கள்

1. கால்நடை மருத்துவ அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் கல்வியை வழங்குதல்
2. கால்நடை மருத்துவ அறிவியலில் கற்றல் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல்
3. அரசின் கால்நடை சார்ந்த துறைகள் ஒத்துழைப்புடன் கிராமப்புற மக்களுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை விரிவுபடுத்துதல்