இப்பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட 1989 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 6,733 மாணாக்கர்கள் இளநிலை பட்டப்படிப்பினையும், 2,265 மாணாக்கர்கள் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் 726 மாணாக்கர்கள் முனைவர் பட்டப்படிப்புகளையும் முடித்துள்ளனர். மேலும், 52 மாணாக்கர்கள் முதுகலை பட்டயப்படிப்பையும், 387 மாணாக்கர்கள் தொலைதூரக் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களையும் முடித்து, மருத்துவ திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்திக் கொண்டுள்ளனர்.
இப்பல்கலைக்கழகம், 2011ஆம் ஆண்டிற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்தார் படேல் சிறந்த நிறுவன விருதைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், 2012ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பி.வி.எஸ்சி. & ஏ.எச். பாடத்திட்டத்தின் மின்னணுக் கல்விக்காக சிறந்த செயல்திறன் விருதைப் பெற்றுள்ளது.
ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம் 1984-ன் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தரச் சான்றிதழ் 16.03.2015 முதல் 15.03.2020 வரை வழங்கப்பட்டுள்ளது.
கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் மற்றும் எம்.டெக் படிப்புகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், இக்கல்லூரி வழங்கும் இளநிலை பட்டங்களை அங்கீகரித்துள்ளது. மேலும், ஓசூர் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை அறிவியல் துறையில் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு முதல் பாலிடெக்னிக் படிப்புகளைத் தொடங்கியது.
பி.வி.எஸ்.சி. & ஏ.எச். படிப்பு தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன..
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இணைய நிலையம் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தேசிய வேளாண் உயர்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ரூ. 28 கோடி ஒதுக்கீட்டைனைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அதன் அனைத்து உறுப்புக் கல்லூரிகளிலும் நவீன நூலகங்களை அமைத்து, கோஹா ஒருங்கிணைந்த நூலக மேலாண்மை அமைப்புடன் தானியங்கி முறையில் இயங்கி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களான ஆர்.எஃப்.ஐ.டி., சி.சி.டி.வி. கண்காணிப்பு மற்றும் பயோமெட்ரிக் வருகை முறை ஆகியவை அனைத்து நூலகங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து நூலகங்களிலும் பல்கலைக்கழக வலையமைப்பு மூலம் அணுகப்படும் மின்நூல்கள் மற்றும் மின் இதழ்களின் வளமான தொகுப்பினைக் கொண்ட டிஜிட்டல் நூலகம் உள்ளது.
நிறுவன வெளியீடுகளை கணினிமயமாக்கும் முறை முறையாக மேற்கொள்ளப்பட்டு, அவை பல்கலைக்கழக டிஜிட்டல் களஞ்சியத்தின் மூலமாகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கிருஷி கோஷ் நிறுவனக் களஞ்சியத்தின் மூலமாகவும் இணையத்தில் கிடைக்கின்றன. இப்பல்கலைக்கழகம், தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தில் 20,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் முதன்மை பங்களிப்பாளராக திகழ்கிறது..
ஆராய்ச்சி
பர்கூர், புலிக்குளம் மற்றும் மலைநாடு கால்நடை இனங்களின் மூலக்கூறுத் தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் உள்ள செம்மறி ஆட்டு இனங்களுக்கு (மேச்சேரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி) மாநிலத்தின் பிற இனங்களுடன் (மெட்ராஸ் சிவப்பு, திருச்சி கருப்பு, கீழக்கரைசல் மற்றும் வேம்பூர்) பரிணாம உறவு உள்ளது கண்டறியப்பட்டது.
காங்கேயம் காளை மற்றும் தோடா எருமைகளின் உறைவிந்து மற்றும் தோடா எருமையின் கருவின் வடிவம் பாதுகாக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம்; சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம்; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம்; தர்மபுரி மாவட்டம், ஹனுமந்தபுரத்தில் ஆலம்பாடி கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
2015-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு மற்றும் கருவிகள் மையம் (University Innovation and Instrumentation Centre -UIIC) அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் மூலம் நூற்றுக்கணக்கான பண்ணை மற்றும் பயன்பாட்டுக் கருவிகள் வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
மாதவரம் பால்பண்ணையில் உள்ள கால்நடை தடய அறிவியல் ஆய்வகம், பல்வேறு நச்சுத்தன்மை வாய்ந்த நோய்களைக் கண்டறிந்து, கால்நடை நோய் கண்டறிய உதவுகிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறு இறைச்சிக் கூடமும், கிராம அளவில் இரண்டு சிறிய கோழிப்பஞ்சு பொரிப்பகங்களும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளன.
நீல நாக்கு நோய் தடுப்பூசி உருவாக்கப்பட்டது
பிசிஆர் மற்றும் நிகழ்நேர பிசிஆர் மூலம் ஏ. பிலவுஸினைத் தனித்துப் பிரித்தெடுப்பதற்கான குறிப்பிட்ட மற்றும் உணர்திறன் கொண்ட மூலக்கூறுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கால்நடை வயிற்றுப்புண்மம், அடி மூலக்கூறுகளை சேர்க்காமல் உயிரி நெகிழி உற்பத்திக்கான பொருத்தமான மற்றும் விலை மலிவான ஊடகமாக அடையாளம் காணப்பட்டது.
மைக்கோபாக்டீரியம் ஏவியம் வகை மற்றும் பாரா-டுபெர்குளோசிஸ் கிருமி வகைகளின் நோயெதிர்ப்பு புரதங்களை இன்-சிலிகோ பகுப்பாய்வு செய்து, ரீக்காம்பினன்ட் புரதத்தைப் பயன்படுத்தி எலிசா-அசேயை உருவாக்கியது.
ஆய்வக அளவில் புரோபயோடிக் பாக்டீரியாவைக் குறியீடாக்கவும், கண்டுபிடிப்பு காப்புரிமை பெறவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏபிடி மினி என்கேப்சுலேட்டர் வி500 உருவாக்கப்பட்டது.
கால்நடைகளின் செரிவான உணவு 1:3 விகிதாச்சாரத்தில் (கால்நடைகளின் செரிமானம்: மண்) கன உலோகங்களான தாமிரம், குரோமியம், துத்தநாகம் மற்றும் ஈயம் தோல் தொழிற்சாலை கழிவுகளில் உள்ள கன உலோகங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
“புருசெல்லா செரா பேனல் கிட்” ப்ரூசெல்லா ஆன்டிபாடி கண்டறிதலுக்கான மதிப்பீடுகளை சரிபார்க்க உருவாக்கப்பட்டது.
செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளிலிருந்து பி.பி.ஆர்.வி. தனிமங்கள் ஐந்து முழுநீள மரபணு வரிசை (KT270355, KTT860063, KT860064, KT860065 மற்றும் Kx033350) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெள்ளாட்டு இனங்கள் அதிக அளவு அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களையும் கன்னி ஆடுகள் அதிகமான ஐஎல் 18 -யும் பெற்றுள்ளன என்பதனை கண்டறிந்தது.
விரிவாக்கப் பணிகள்
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம், 2010ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்திடமிருந்து சிறந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கான விருதினைப் பெற்றுள்ளது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு உலக கால்நடை மருத்துவ ஆண்டினை நினைவுகூரும் வகையில் “மாபெரும் அறிவியல் கண்காட்சி” நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், ஏழு மண்டல கால்நடை கண்காட்சிகளை நடத்தியது.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம், வெர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து “கிராமப்புற அறிவு மற்றும் தகவல் மையத்தினை" காஞ்சிபுரம் மாவட்டம், தளம்பேடு கிராமத்தில் 2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் முறையே 65 ஏக்கர் மற்றும் 80 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன உற்பத்தி அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சேவைக்காக “நடமாடும் கால்நடை மருத்துவ அவசர சேவை” தொலைபேசி எண் 1962 அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் "இலவச கறவை மாடுகள், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வழங்குதல்" திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் பல்கலைக்கழக பயிற்சி மையங்கள் மூலம் அறிவியல் சார்ந்த கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பயிற்சி பெற்ற பின் 25 சிறு அளவிலான உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டுக்கான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ராஷ்ட்ரிய கிருஷி விக்யான் புரோஷஹன் புரஸ்கார் விருதினை நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வழங்கியுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தை, அதாரி மண்டலம் X-ன் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண்மை அறிவியல் மையமாக அடையாளம் கண்டுள்ளது.
மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் முதல் தேசிய நீர் இயக்க விருது (இரண்டாம் பரிசு) நுண்ணீர் பாசனம் மூலம் நீர் பயன்பாட்டுத் திறனை 20 சதவீதம் அதிகரித்தற்காக குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்திற்கு வழங்கப்பட்டது.
கால்நடை அறிவியல் குறித்த ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்படுத்தப்பட்ட நிறுவனம் மற்றும் தலைவாசலில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் தொடக்கவிழா 2020ஆம் ஆண்டில் நடைபெற்றது.