vcri, Namakkal

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்

ஆராய்ச்சி

இந்தக் கல்லூரியில், கால்நடைகளின் ஆரோக்கியம், உற்பத்தி மற்றும் நலன் தொடர்பான ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் தேசிய வேளாண் ஆராய்ச்சி, தேசிய பால் வளர்ச்சி குழுமம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை,மற்றும் உலக வங்கி போன்றவற்றால் நிதியளிக்கப்பட்ட வெவேறு ஆராய்ச்சி திட்டங்களைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் வசதிகளின் அடிப்படையில் பல்வேறு நிதி நிறுவனங்களின் நிதியுதவி ஆராய்ச்சி திட்டங்கள்; மற்றும் வெளிநாட்டு கூட்டு திட்டங்களையும் பெற்றுள்ளது. இக் கல்லூரியில்தனியார் நிறுவனங்களுக்கான மருந்துகள், மருந்து சேர்க்கைகள் போன்றவற்றை ஆய்வுத் திட்டங்களின் அடிப்படையில் சரிபார்த்தல் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களின் திட்டங்கள் மற்றும் துணை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்கல்லூரியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆராய்ச்சி முடிவு

காப்புரிமை பெறப்பட்டது

  • மறுசுழற்சி செய்யப்பட்ட கோழி எண்ணெயிலிருந்து பயோ டீசல் உற்பத்திக்காக 2021 இல் காப்புரிமை பெறப்பட்டது (காப்புரிமை எண்: 371344 தேதி : 07.07.2021 வழங்கியது : இந்திய அரசு)
  • கோழி எண்ணெயிலிருந்து பயோடீசல் உற்பத்தியானது, கிராமப்புற வளர்ச்சியைத் தூண்டுவதற்கும், தீங்கு விளைவிக்கும் மாசுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் ஒரு சாத்தியமான வழிமுறையாகும்.

முக்கிய ஆராய்ச்சி சாதனைகள்

  • கேரட் சாறு மற்றும் ஏலக்காயை இயற்கையான வண்ணம் மற்றும் சுவையூட்டும் முகவர்களாகப் பயன்படுத்தி சுவையூட்டப்பட்ட பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
  • மீன், தவிடு மற்றும் எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஆகியவற்றில் கலப்படம் செய்வதைக் கண்டறியும் தொழில்நுட்பம் சரிபார்க்கப்பட்டது.
  • புரோஜெஸ்ட்டிரோன் செறிவூட்டப்பட்ட கடற்பாசிகளைப் பயன்படுத்தி கறவை மாடுகளில் சினைப் பருவ தூண்டல் மற்றும் ஒத்திசைவு
  • 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக கோழிப்பண்ணையில் சுவாச நோய்க்கு காரணமான ஆர்னிதோபாக்டீரியம் ரைனோட்ரேஷியல் தனிமைப்படுத்தப்பட்டது.
  • கோழிகளில் உள்ள “ஸ்வோலன் ஹெட் சிண்ட்ரோம்” நோய்க்கு காரணமான ஏவியன் மெட்டாப்நியூமோவைரஸ், இந்தியாவில் முதன்முறையாக 2014ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
  • கோழி கலப்பினங்கள் (நாமக்கல் கோழி, நாமக்கல் காடை, நாமக்கல் தங்க காடை) உள்ளூர் விவசாயிகளின் நிலைமைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது.
  • கால்நடைப் பொருட்கள் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட குலாபஜாமூன் கலவை தயாரிப்புத் தொழில்நுட்பம் - பால் அறிவியல் துறையின் மூலம் 29.11.2018 அன்று ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க லிமிடெட் நிறுவனத்திற்கு வெகுஜன உற்பத்தி மற்றும் விற்பனைக்காக மாற்றப்பட்டது.
  • தொற்று நோய் (Orf) மற்றும் மாட்டினங்களின் பாப்பிலோமாவுக்கான தன்னியக்க தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.