கால்நடை மருத்துவ நோய்க்குறியியல் துறை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

வரலாறு:

கால்நடை நோய்க்குறியியல் துறையானது மாணவர் கல்வி, நோய் கண்டறிதல், கால்நடை ஆராய்ச்சிகள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் விலங்கு உரிமையாளர்களுக்கு பயிற்சிகள் போன்ற நோக்கத்துடன் முழு கட்டமைப்பு வசதிகளுடன் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

குறிக்கோள்கள்:

  • நல்ல தரமான கால்நடை மருத்துவ இளங்கலை கல்வியை வழங்குதல்.
  • கால்நடைகள், கோழிகள், காட்டு விலங்குகள் மற்றும் மீன்களில் ஏற்படும் நோய்களை பிரேத பரிசோதனை, நோய்க்கண்டறிதல் மற்றும் நுண்திசுப்பிணி மூலமாக ஆராய்தல்.
  • முறையான நோய் கண்டறிதல் மற்றும் நோய் நோய்க்கிளர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது.
  • கால்நடை மருத்துவர்களுக்கு உடற்கூறு கண்டறியும் நுட்பங்கள், உயிர் திசுக்களின் மாதிரிகள், மற்ற மாதிரிகள் சேகரிப்பு போன்றவை குறித்து பயிற்சித் திட்டங்களை வழங்குதல்.
  • கள ஆராய்ச்சி சார்ந்த பணிகளை மேற்கொள்ளுதல்.

சேவைகள்:

மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து உபகரணங்களுடன் ஒவ்வொரு பிரிவிற்கும் தனிப்பட்ட அறை, இடம் போன்ற நன்கு நிறுவப்பட்ட உள்கட்டமைப்புகளை இந்த துறை கொண்டுள்ளது. இளங்கலை மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த துறையானது நன்கு நிறுவப்பட்ட உடற்க்கூறு கண்டறியும் நுட்பங்கள், உடலணுஅமைப்பியல், நோய் காண்வியல், திசு நுண்ணோக்கி பரிசோதனைகள் மற்றும் நோய் எதிர்ப்பு நுண் திசுவேதியியல் போன்ற ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதற்கான இரண்டு தேர்வு அறைகள் முழு வசதியுடன் நிறுவப்பட்டுள்ளது.

ஆய்வக வசதிகள் மற்றும் நோய்கண்டறியும் சேவைகள்

  • விலங்கு நோய்க்குறியியல் அருங்காட்சியகம்
  • விலங்கு உடற்க்கூறு அறை
  • திசு செய்முறை மற்றும் மூலக்கூறு புற்றுநோயியல் ஆய்வகம்
  • நோய் காண் ஆய்வகம்
  • இளங்கலை செய்முறை வகுப்பு அறைகள்

கல்வி:

இளநிலை மாணவர்களுக்கு கால்நடை மருத்துவ நோய்க்குறியியல் குறித்த பாடங்கள் இரண்டாவது ஆண்டில், எம்.எஸ்.வி.இ- 2016 ஒழுங்குமுறையின்படி கற்பிக்கப்படுகிறது.

ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம்

புலனாய்வு கள ஆராய்ச்சி மூலம் கால்நடை மருத்துவயியல் அறிவை மேம்படுத்துவதில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் அது குறித்து ஆராயும் குழுவின் ஒரு பகுதியாக கால்நடை மருத்துவ நோய்க்குறியியல் பேராசிரியர்கள் உள்ளனர். வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த துறையின் பேராசிரியர்கள் பல்வேறு தொற்றுநோய் கண்டறிதலில் ஈடுபட்டுள்ளனர்.

வல்லுநர்கள்

  • ரா. தங்கத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • வே. குமார், உதவிப் பேராசிரியர்
  • கு. கோபால், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ நோய்க்குறியியல் துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

ராமையன்பட்டி, திருநெல்வேலி - 627 358, தமிழ்நாடு.

தொலைபேசி: +91- 462 – 2336345

மின்னஞ்சல்: vppvcritni@tanuvas.org.in