கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை

வரலாறு:

கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறையானது நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையதில் இயங்கி வரும் ஒரு துறையாகும். இது கால்நடை மருத்துவ சபையின் கால்நடை கல்வி ரைமுறைகளின் குறைந்தபட்ச தரநிலை -2016 அடிப்படையில், இளநிலை மற்றும் முதுநிலை பி. வி. எஸ்.சி ., எ. ஹெச் . கால்நடை மருத்துவ படிப்புக்கல்வியினை வழங்குவதாகும்.

குறிக்கோள்:

  • கால்நடை மற்றும் மனித நலன் மேம்பாட்டிற்காககவும், சுற்றுப்புறப் ஒருமைப்பாட்டிற்காகவும் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் குறித்த பாடங்களை இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு கற்பித்து வருதல்.
  • நோய் நிகழ்வாய்வியல் மற்றும் மக்கள் மருத்துவம் ஆகியவற்றில் தனித்திறன் மற்றும் தனித்துவ அறிவு மூலம் விலங்கின மற்றும் மனித நலனின் தரம் மேம்படச் செய்தல்
  • விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்கள் குறித்த களப்பயன்பாடு கொண்ட ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் உத்திகளை சிறந்த முறையில் வடிவமைத்தல்.
  • பால் மற்றும் இறைச்சி சுகாதாரம், பொது சுகாதாரம், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்கள் குறித்த அறிவியல் கருத்துக்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபரங்களை வழங்குதல்.

சேவைகள்:

  • உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு செல்லப்பிராணிகளுக்கு நாமக்கல் மாவட்ட அளவிலான வெறிநோய்த் தடுப்பூசி முகாம் 2019, 2020 மற்றும் 2021-இல் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
  • உலக காசநோய் தினம் மற்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் நோய்கள் குறித்த உலக தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
  • உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு 2019, 2020, 2021 மற்றும் 2022- பசுமை பாரத இயக்கத்தின் கீழ் இக்கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கான முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.

கல்வி:

  • விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே பரவும் முக்கிய நோய்களைக் கண்டறிதல் மற்றும் பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்துதல் குறித்த செயல்முறைப் பயிற்சியினை மாணவர்களுக்கு அளித்தல்
  • சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அவற்றின் தடுப்பு முறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குதல்.

பயிற்றுவிக்கப்படும் இளங்கலைப் பாடப்படிப்புகள்

  • VPE - கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் (3+1)

சாதனைகள்/ காப்புரிமைகள்/ தொழில்நுட்ப பரிமாற்றங்கள்:

வல்லுநர்கள்

  • முனைவர் க. செல்வராஜூ, பேராசிரியர் மற்றும் தலைவர்,
  • முனைவர். சு. சரவணன் இணைப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை பொது சுகாதாரம் மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறை,

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

நாமக்கல் – 637 002

தொலைபேசி : 04286-266491 / 92 / 93 இணைப்பு எண்: 614

மின்னஞ்சல்: vph-vcri-nkl@tanuvas.org.in